சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன் பேட்டரி வெடித்தது குறிப்பிடத்தக்கது. இதனால் அந்த ஸ்மார்ட்போனை பயணிகள் விமானங்களில் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன்களை திரும்ப பெற்றுக்கொண்டது.
இந்நிலையில் ஸ்பெயின் நாட்டு விமான பயணிகளில் 200 பேருக்கு கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன்களை சாம்சங் நிறுவனம் இலவசமாக வழங்கியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள கேலக்ஸி நோட் 8 வாடிக்கையாளர்கள் பயன்படுத்த பாதுகாப்பான சாதனம் என்பதை உணர்த்தும் வகையில் விமான பயணிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.