எம்மை கண்டு பிடிக்க முயற்சி செய்ய வேண்டாம் ! மண்டை ஓடுகளால் அமைந்த இரகசிய இடம்!
பிரசுரிக்கபட்ட திகதி: 12/05/2017 (வெள்ளிக்கிழமை)
பொழுது போக்குக்காக அமைக்கப்படும் ஓர் இடமே திரையரங்கு. ஆனாலும் எலும்புகளாலும், மண்டை ஓடுகளாலும் அவ்வாறான தொரு திரையரங்கு அமைக்கப்பட்டு இருக்குமாயின் அது பொழுதுபோக்கின் நிமித்தம் என்று கூற முடியுமா?
இவ்வாறு அதிர்ச்சி தரும் திரையரங்கு ஒன்று பாரிஸ் நகரில் நிலத்தின் கீழ் சுரங்கம் ஒன்றில் அமைக்கப்பட்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டது. இந்தச் சுரங்கம் Catacombs என அழைக்கப்படுகின்றது.
சுமார் 1738 களில் உருவாக்கப்பட்டதாக கூறப்படும் இந்தச் சுரங்கம் பண்டைய காலத்தில் ஓர் கல்லறையாக இருக்கலாம் என்பதோடு, எலும்புகளும் மண்டை ஓடுகளையும் கொண்ட ஓர் நீண்ட சுரங்கமாகவே காணப்பட்டுள்ளது.
ஆனாலும் இந்தச் சுரங்கத்தில் இரகசியமானதோர் திரையரங்கு அமைக்கப்பட்டுள்ளது என்பது 2004ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்டது.
செய்தியாளர் ஒருவரின் உதவியுடன் இந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது. மண்டை ஓடுகள் நிறைந்து காணப்பட்ட இந்த இடம் பார்ப்பதற்கு பயங்கரமாகவும், சந்தேகத்திற்குரியதாகவும் காட்சியளித்ததால் பொலிஸார் விசாரணைக்கு சென்றுள்ளனர்.
அங்கே 1950 தொடக்கம் வெளிவந்த திரைப்படங்கள் ஏராளமானவை காணப்பட்டுள்ளன. அத்தோடு இரகசியமாக இந்த இடத்திற்கு மின்சார வசதியும் செய்யப்பட்டிருந்தது.
இதனைவிடவும் ஆச்சரியம் தரும் வகையில் இந்த மர்ம இடத்திற்கு 3 தொலைபேசி அழைப்புகளும், இணைய வசதியும் கூட செய்யப்பட்டிருந்தது. அத்தோடு அதிஉயர் மது வகைகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
அதனைத் தொடர்ந்து தீவிரவாத அமைப்புடன் தொடர்புபட்ட ஓர் குழுவின் செயற்பாடுகளாக இருக்க முடியும் என்ற கோணத்தில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
ஆனால் இங்கு கிடைத்த குறிப்புகள், ஓவியங்கள் மற்றும் அமைப்பு முறை போன்றவற்றை ஆய்வு செய்தபோது இந்த சுரங்கத்திற்கும் தீவிரவாத அமைப்புக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் பின்னர் மூன்று நாட்கள் கழித்து மீண்டும் அந்த இடத்திற்கு பொலிஸ் குழு சென்ற போது அவர்களுக்கு மேலும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து தீவிரவாத அமைப்புடன் தொடர்புபட்ட ஓர் குழுவின் செயற்பாடுகளாக இருக்க முடியும் என்ற கோணத்தில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டன.ஆனால் இங்கு கிடைத்த குறிப்புகள், ஓவியங்கள் மற்றும் அமைப்பு முறை போன்றவற்றை ஆய்வு செய்தபோது இந்த சுரங்கத்திற்கும் தீவிரவாத அமைப்புக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் பின்னர் மூன்று நாட்கள் கழித்து மீண்டும் அந்த இடத்திற்கு பொலிஸ் குழு சென்ற போது அவர்களுக்கு மேலும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
மேலும் இங்கு திரைப்படங்கள் ஊடாக தகவல் பரிமாற்றங்கள் நடைபெற்றிருக்க வேண்டும் எனவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். தீவிரவாத அமைப்புடன் தொடர்புபடாத அந்த இடத்தில் வாழ்ந்தவர்கள் யார்?
அது மட்டுமல்லாது பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருந்தபோதும், அந்த இடம் அழிக்கப்பட்டது எவ்வாறு? இந்தக் கேள்விகளுக்கு விடைகள் கொடுக்கப்பட வில்லை.அதேபோன்று இந்த விடயத்தினை அப்படியே மூடிமறைத்து வெளி உலகத்திற்கு தெரியாமல் இரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.
எனினும் மண்டை ஓடுகள் நிறைந்த இந்த மர்ம திரையரங்கு பற்றிய ஆய்வுகள் இன்றும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.