எம்.ஜி.ஆர், முத்தையா முரளிதரன் போன்றோரை தந்தது இலங்கை மண்ணே!..
பிரசுரிக்கபட்ட திகதி: 12/05/2017 (வெள்ளிக்கிழமை)
ஹட்டன் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையை திறந்து வைத்து, தொடர்ந்து நோர்வூட் மைதானத்தில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதை தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
புலம்பெயர்ந்து இருக்கின்ற இந்திய வம்சாவளி மக்களின் வளர்ச்சியில் இந்தியா எப்பொழுதும் உறுதியாக இருக்கின்றது. இங்குள்ளவர்களின் படிப்பு, பொருளாதாரம் என அனைத்திலும் இந்தியா உடனிருக்கும்.
இந்திய கலாச்சாரம், இந்திய பண்டிகைகள், என அனைத்தையும் இலங்கை மலையக மக்களும் கொண்டாடுகின்றனர். இதன் மூலம் நாம் அனைவரும் ஒன்று என்பதை காட்டுவதாக உள்ளது.
இந்திய வம்சாவளியினர் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன என்பதையும் மோடி நினைவுபடுத்தியுள்ளார்.
தற்போது இந்திய வீட்டுத்திட்டத்தின் உதவியுடன் மலையக மக்களுக்கு, 4000 வீட்டுத்திட்டத்திற்கான செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது யாவரும் அறிந்த ஒன்றே. அதேபோல் 10,000 வீட்டுத்திட்டமும் விரைவில் முன்னெடுக்கப்படும் எனவும் இந்திய பிரதமர் உறுதியளித்துள்ளார்.
மேலும், இதன் போது தமிழிலும் மோடி உரையாற்றியுள்ளார். சில பாடல் வரிகள், திருக்குரள் என சிலவற்றை தமிழில் பேசி, இறுதியாக நன்றி கூறி அங்குள்ள அனைவருடைய வரவேற்பையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.