பதவி நீக்கம் செய்யப்பட்பட்ட உளவுத்துறை இயக்குநருக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 12/05/2017 (வெள்ளிக்கிழமை)
நமது உரையாடல் தொடர்பான பதிவுகள் ஏதும் இல்லை என நம்புகிறேன்" என்று வெள்ளிக்கிழமை தனது ட்விட்டர் பதிவில் டிரம்ப் குறிப்பிட்டிருக்கிறார்.
தேர்தல் நேரத்தில், அதிபர் டிரம்பின் தேர்தல் பிரசார குழுவினருக்கும் ரஷ்யாவுக்கும் தொடர்பு இருந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தி வந்த கோமி, கடந்த செவ்வாய்க்கிழமை பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
தான் விசாரணை வரம்புக்குள் இல்லை என்று கோமி தன்னிடம் கூறியதாக டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
சாத்தியமானால், நான் விசாரணையின் கீழ் இருக்கிறேனா என்பதைச் சொல்லுங்கள் எனக் கேட்டேன். நீங்கள் விசாரணையின் கீழ் இல்லை என அவர் தெரிவித்தார் என்று டிரம்ப் தெரிவித்தார்.
ஜேம்ஸ் கோமியை பதவி நீக்கியது தன்னுடைய முடிவு மட்டுமே என்று அதிபர் டிரம்ப் என்பிசி நியுஸிடம் தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு பற்றியும், டிரம்பின் பரப்புரை அதிகாரிகளுக்கும், மாஸ்கோவுக்கும் இடையே சாத்தியமாகியிருக்கலாம் என்று கருதப்படும் இணக்கம் பற்றியும் ஜேம்ஸ் கோமி விசாரணை ஒன்றை தலைமையேற்று நடத்தி வந்தார்.
இந்த விசாரணையை போலித்தனம் என்று கூறி இது நடைபெறுவதை டிரம்ப் ரத்து செய்திருக்கிறார். கோமிக்கு அடுத்ததாக இந்த பொறுப்பை ஏற்றிருப்பவர் இந்த கோரிக்கையில் இருந்து அப்படியே முரண்படுகிறார்.
புதிய நிர்வாகத்தில் தொடர்ந்து பணிபுரிய விருப்பம் இருந்ததால், உளவுத்துறை தலைவர் விரும்பி கேட்டுகொண்ட வெள்ளை மாளிகை விருந்தில் கோமி தான் விசாரணையின் கீழ் இல்லை என முதலில் தெரிவித்ததாக அதிபர் டிரம்ப் கூறிருக்கிறார்.
ஆனால், வெள்ளை மாளிகை தான் இந்த விருந்தை ஏற்பாடு செய்திருந்தது என்றும், அதிபர் விசாரணயின் கீழ் இருக்கிறார் என்பதை கோமி அவரிடம் தெரிவித்திருக்க வாய்ப்பில்லை என்று கோமிக்கு நெருங்கியவரும், பெயர் குறிப்பிடப்படாத முன்னாள் மூத்த உளவுத்துறை அதிகாரியுமானவரை மேற்கோள்காட்டி, என்பிசி பின்னர் தெரிவித்திருக்கிறது.
டிரம்ப் தெரிவித்திருப்பதுபோல இந்த உரையாடல் முறையானதாக இடம்பெறாமல் இருந்திருக்கலாம் என்று சட்ட நிபுணர்களின் கவலைகளை வெள்ளை மாளிகை நிராகரித்திருக்கிறது.