குறித்த வாக்கெடுப்பு இலங்கைக்கு சாதகமான முறையில் நிறைவடைந்துள்ளதுடன், இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் யோசனைகளை இலங்கை நிறைவேற்றுவதில் தாமதம் காட்டி வருவதாக குற்றம் சுமத்தி ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் இடதுசாரிகள் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனடிப்படையில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 52 பேர் சமர்ப்பித்திருந்த யோசனைக்கான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது.
இதில், குறித்த யோசனைக்கு எதிராக 436 வாக்குகளும், ஆதரவாக 119 வாக்குகளும் வழங்கப்பட்டுள்ளதுடன், 22 பேர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இலங்கைக்கு எதிரான யோசனை தோல்வி
இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மீண்டும் வழங்கப்படுவதை எதிர்த்து ஐரோப்பிய பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்த யோசனையை இன்று தோற்கடிக்கப்பட்டுள்ளது.
இலங்கை, மனித உரிமை உட்பட சில துறைகளில் போதுமான முன்னேற்றத்தை காண்பிக்கவில்லை எனக் கூறி ஐரோப்பிய பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 52 உறுப்பினர்கள் இந்த யோசனை கொண்டு வந்திருந்தனர்.
பாராளுமன்றத்தில் இன்று நடந்த யோசனை தொடர்பான வாக்கெடுப்பில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 436 உறுப்பினர்கள் வாக்களித்தனர். யோசனைக்கு ஆதரவாக 119 வாக்குகள் அளிக்கப்பட்டன.
22 உறுப்பினர்கள் பிரசன்னமாய் இருக்கவில்லை.இதனடிப்படையில், ஐீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை இலங்கைக்கு வழங்க ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்துள்ள யோசனை செல்லுப்படியாகும்.
இலங்கைக்கு இந்த வரிச்சலுகையை வழங்குவதா இல்லையா என்பது குறித்து இறுதி தீர்மானத்தை ஐரோப்பிய ஒன்றிய பேரவை எடுக்கும்.
இலங்கையின் உற்பத்தி பொருட்களை ஐரோப்பிய நாடுகளுக்கு இறக்குமதி செய்யும் போது வழங்கப்படும் வரிச்சலுகையான ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை இலங்கை மீண்டும் வழங்கும் யோசனை முன்வைத்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு கடந்த ஜனவரி 11ஆம் திகதி அறிவித்தது.
மனித உரிமை, தொழிலாளர் சட்டம், நல்லாட்சி, சுற்றாடல் பாதுகாப்பு போன்ற துறைகளை அடிப்படையாக கொண்டு 27 சர்வதேச இணக்கப்பாடுகளை அமுல்படுத்த இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்தமை மற்றும் இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு ஆகியவற்றை கவனத்தில் கொண்டு ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு இந்த தீர்மானத்தை எடுத்திருந்தது.