மாவட்ட ரீதியில் 9A சித்திகளை பெற்று சாதனைப்படைத்த மாணவர்களின் விபரங்கள் இதோ...
பிரசுரிக்கபட்ட திகதி: 29/03/2017 (புதன்கிழமை)
இதன்பிரகாரம் இது வரையில் கிடைக்கபெற்ற தகவலின் அடிப்படையில் ஒன்பது பாடங்களிலும் 9A பெற்று சாதனைப்படைத்த மாணவர்களின் விபரங்கள் இதோ....
01-கொழும்பு மாவட்டம்
கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலயத்தில் 27 மாணவிகள் 9A சித்திகளை பெற்றுள்ளனர்.
கொழும்பு இந்துக் கல்லூரியில் 13 மாணவர்கள் 9A சித்திகளை பெற்றுள்ளனர்.
02-கண்டி மாவட்டம்
கண்டி மஹமாயா மகளிர் பாடசாலையின் எஸ்.எம்.முணசிங்க என்ற மாணவி அகில இலங்கை ரீதியில் 2 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
03-நுவரெலியா மாவட்டம்
கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தை சேர்ந்த மாணவி பரசுராம் மதுரா 9A சித்திகளை பெற்றுள்ளார்.
04-யாழ்ப்பாணம் மாவட்டம்
யாழ்.இந்து கல்லூரி மாணவன் அ.அபிநந்தன் 9 பாடங்களில் A தர சித்தி பெற்று யாழ்.மாவட்டத்தில் முதலாம் இடத்தையும், தேசிய மட்டத்தில் தமிழ் மொழிமூலம் முதலாம் இடத்தினையும், தேசிய மட்டத்தில் 5ஆம் இடத்தினையும் பெற்றுள்ளார்.
05-வவுனியா மாவட்டம்
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் க.பொ.த. சாதாரண தரத்தில் 234 மாணவர்கள் தோற்றிய நிலையில் 10 மாணவர்கள் 9A சித்திகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.
வவுனியா மாவட்டத்தில் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் தமிழ் மொழி மூலத்தில் 9 மாணவிகள் 9 ஏ சித்திகளை பெற்றுள்ளனர்.
அதன்படி, தமிழ் மொழி மூலத்தில் மயூரி பேரின்ப நாயகம், கிசோபிகா சஜரூபன், நிதிகா கரிகரசக்தி, சுஜித்திகா ஜெயபற்றிக் ரஞ்சித், தர்சிகா கிரிதரன், கிருசிகா திருச்செல்வம், சாம்பவி தவராசா, கோபிசாளினி குமாரசிங்கம், லதுசிகா கிருபானந்தம் ஆகிய மாணவிகள் 9 ஏ சித்திகளை பெற்றுள்ளனர்.
இதேவேளை ஆங்கில மொழி மூலத்தில் 9 மாணவிகள் 9 ஏ சித்திகளை பெற்றுள்ளனர்.
அதன்படி சஜனி கணேசலிங்கம், சின்மதி சத்தியலிங்கம், மதுசா ஜெயக்குமார், லபிரா அகிலநாயகம், சங்கவி புவனேசன், சரோனி இவன்சிலின் அன்ரனி ஜெயனாத், அட்சயா சிவபாதசுந்தரம், சரண்ஜா சூரியகுமாரன், குசேதா குகநாதன் ஆகிய மாணவிகள் ஆங்கில மொழி மூலத்தில் 9ஏ பெற்றுள்ளார்கள்.
06-முல்லைத்தீவு மாவட்டம்
முல்லைத்தீவு கல்வி வலயத்திற்குட்பட்ட மு /புதுக்குடியிருப்பு மத்தியக்கல்லூரி மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.
மாணவன் சிவராசா பகீரதன் 9A ஆகியோர் ஒன்பது ஏ சித்திகளை பெற்றுள்ளனர்.
07-கிளிநொச்சி மாவட்டம்
முதல் முறையாக கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்தில் இருவர் 9ஏ சித்திகள் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
08-மட்டக்களப்பு மாவட்டம்
மட்டு நகர் சிவாநந்தா தேசிய பாடசாலை மாணவன் நாகராஜன் சொரூபன் 9 பாடங்களிலும் A தர சித்தியினை பெற்று பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமை தேடிக்கொடுத்துள்ளார்.
கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை இந்துக்கல்லூரி வரலாற்றின் முதல் தடவையாக ஐந்து மாணவர்கள் ஒன்பது ஏ சித்திகளை பெற்றுள்ளனர்.
இதில் வி.ஹர்ஷாந், கோ.அனுராஜிதன், ந.அஞ்சனன், க.அஞ்சைகுமார், த.கேந்துஜன் ஆகியோரே ஒன்பது ஏ சித்தி பெற்றுள்ள மாணவர்களாவர்.
08-அம்பாறை மாவட்டம்
சம்மாந்துறை அல்மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் அப்துல் றசூல் பாத்திமா றிஸ்தா மற்றும் அமீர்அலி பாத்திமா றொஸ்னி ஆகியோர் 9 A சித்திகளை பெற்றுள்ளனர்.
சம்மாந்துறை முஸ்லிம் தேசிய பாடசாலையில் 14 மாணவர்கள் 9 A பெற்றுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை வலயத்தில் நாவிதன்வெளிக் கோட்டத்தில் இரட்டைச் சகோதரிகள் இருவரும் 9 A சித்திகளைப் பெற்றுள்ளனர்.
றாணமடு இந்து மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த அற்புதராஜா மிராளினி மற்றும் அற்புதராஜா விதுசனா எனும் இரட்டையர்களே இவ்வாறு சித்தியடைந்துள்ளனர்.
குறித்த விபரங்கள் இது வரையில் கிடைக்கபெற்ற தகவலின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.