இலங்கை தொடர்பான தீர்மானம் ஐ.நாவில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது!
பிரசுரிக்கபட்ட திகதி: 23/03/2017 (வியாழக்கிழமை)
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்டத் தொடர் ஜெனீவாவில் இடம்பெற்று வருகின்ற நிலையில், இலங்கைக்கு கால அவகாசம் வழங்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் முன்வைத்த தீர்மானத்தை அமுல் படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் கோரியிருந்தது.
இந்த நிலையில், கால அவகாசம் வழங்குவது தொடர்பில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முன்னதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான தீர்மானம் நேற்றைய தினம் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தமிழர் தரப்பு பிரதிநிதிகள், மனித உரிமைகள் ஆர்வலர்கள், இலங்கையிலிருந்து சென்ற பிரதிநிதிகள் என பலரும் இதன் போது அரங்கில் அமர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.