நீதிபதி இளஞ்செழியனின் வருகையுடன் ஆரம்பமானது வடக்கின் 111ஆவது பெரும்போர்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/03/2017 (வியாழக்கிழமை)
பலத்த எதிர் பார்ப்புக்களுடன் வருடாவருடம் இடம்பெறும் இந்த போட்டி கடந்த ஆண்டு வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவடைந்த நிலையில் இவ்வருடம் கிண்ணத்தை கைப்பற்ற இரண்டு அணிகளும் புதிய உற்சாகத்துடன் களமிறங்கியுள்ளன.
யாழ்.மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று காலை இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வுகளை தொடர்ந்து, இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி தலைவர் ஜெனி பிமென் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தார்.இதற்கமைய பிரியலக்சன் தலைமையில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய யாழ்.மத்திய கல்லூரியினர் தமது முதல் இன்னிங்சில் 57.3 ஓவர்கள் பந்து வீசப்பட்ட நிலையில் 167 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
இதில் அதிக பட்சமாக யாழ்.மத்திய கல்லூரி முன்னணி துடுப்பாட்ட வீரர் தசோபன் 48 ஓட்டங்களையும், கொதமன் 37 ஓட்டங்களையும் பெற்றனர்.பந்து வீச்சில் சென்.ஜோண்ஸ் கல்லூரியின் வேகப்பந்து வீச்சாளர் 18 ஓவர்கள் வீசி 38 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து அதிகபட்சமாக நான்கு விக்கட்டுக்களை பெற்றார்.