உடனடியாக பழனிச்சாமியின் தீர்மானத்தின் மீது சபாநாயகர் தனபால் தலைகளை எண்ணும் நடைமுறையின்படி வாக்கெடுப்பு நடத்தினார் சபாநாயகர். இதில் பழனிச்சாமிக்கு ஆதரவாக 122 எம்.எல்.ஏக்களும் எதிராக 11 எம்.எல்.ஏக்களும் வாக்களித்தனர். இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றதாக சபாநாயகர் அறிவித்தார். இதைத் தொடர்ந்து சட்டசபையை சபாநாயகர் ஒத்திவைத்தார்.
தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் இல்லாமல் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார். ஆனால் இதற்கு திமுக, காங்கிரஸ் மற்றும் ஓபிஎஸ் அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கூவத்தூர் சிறையில் இருந்து எம்.எல்.ஏக்களை கைதிகளைப் போல நேரே சட்டசபைக்கு அழைத்து வந்து வாக்கெடுப்பு நடத்துவது சரியல்ல; அவர்களை தொகுதிகளுக்கு அனுப்பி வைத்துவிட்டு ஒருவாரம் கழித்து ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று திமுகவினர் வலியுறுத்தினர்.