நேற்று சரணடைய வேண்டிய சசிகலா தனக்கு உடல்நிலை சரியில்லை என கூறி 4 வார கால அவகாசம் கேட்டிருந்தார். ஆனால் நீதிமன்றம் அதற்கு மறுப்பு தெரிவித்து உடனடியாக சரணடைய வேண்டும் இல்லையென்றால் கைது செய்து அழைத்து செல்லப்படுவார் என எச்சரித்தது.
இதனையடுத்து பெங்களூர் சிறைக்கு இன்று மதியம் புறப்பட்டு சென்றார். முன்னதாக சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தி சபதம் செய்து விட்டு அங்கிருந்து ராமாபுரம் எம்ஜிஆர் இல்லத்துக்கு கிளம்பி சென்றார்.
அங்கு அங்கு எம்ஜிஆர் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய சசிகலா அங்கு சிறிது நேரம் அமர்ந்து தியானம் செய்தார். பின்னர் வெளியே இருந்த எம்ஜிஆர் சிலைக்கும் மரியாதை செலுத்தினார். பின்னர் சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹாராவில் உள்ள கூடுதல் உரிமையியல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராக சென்றனர்.
சசிகலா மற்றும் இளவரசி ஒரு காரில் சென்றார். ஆனால் சுதாகரன் சரணடையவில்லை என்ற தகவல் வருகிறது. சரியாக 5.15 மணிக்கு நீதிமன்ற வளாகத்தில் நுழைந்த சசிகலா நீதிபதி அஸ்வத் நாராயனா முன் சரணடைந்தார்.