சீனாவால் அனைவருக்கும் தலைவலி: போர் உறுதி; டிரம்ப் ஆலோசகர் காட்டம்!!
பிரசுரிக்கபட்ட திகதி: 04/02/2017 (சனிக்கிழமை)
கடந்த 10 ஆண்டுகளில் அசுர வளர்ச்சியடைந்துள்ள சீன தெற்கு ஆசிய கடற்பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தென் சீனக் கடற்பகுதியில் செயற்கை தீவுகளை உருவாக்கி, அண்டை நாடுகளுக்கு மட்டுமின்றி அமெரிக்காவுக்கும் பெரும் தலைவலியாக உள்ளது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்பின் முதன்மை ஆலோசகர் ஸ்டீவ் பெனான் அமெரிக்காவுக்கு 2 அச்சுறுத்தல்கள் உள்ளன. ஒன்று சீனா மற்றொன்று இஸ்லாம். சீனா மீது 10 ஆண்டுகளுக்குள் நிச்சயம் போர்த்தொடுக்கப்படும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். மேலும், மத்திய கிழக்கு நாடுகள் மீது மீண்டும் ஒரு போர்த்தொடுக்கப்படும் என நினைக்கிறேன், என டிரம்பின் ஆலோசகர் ஸ்டீவ் பெனான் கூறியுள்ளார்.