நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட பொதுமக்கள் கருத்தறியும் குழுவின் இறுதி அறிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் கையளிக்கப்படவுள்ளது.பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் ஸ்தாபிக்கப்பட்ட நல்லிணக்க செயலணியானது, நாட்டின் சகல பிரதேசங்களிலும் பல மாதங்களாக மக்கள் கருத்துக்களை கேட்டறிந்தது.குறித்த கருத்துக்களின் இடைக்கால அறிக்கை ஏற்கனவே கையளிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த செயலணியின் பரிந்துரைகளும் உள்ளடங்கிய இறுதி அறிக்கையை இன்று கையளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.