இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பில் கருணா என்ற பெயரில் தளபதியாக இருந்தவர் விநாயகமூர்த்தி முரளிதரன். விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, தனிக் கட்சி தொடங்கி, பின்னர் ராஜபக்சே அரசின்போது துணை அமைச்சராக இருந்தார். மேலும் ராஜபக்சே தலைவராக இருந்தவரை இலங்கை சுதந்திரக் கட்சியின் துணைத் தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார்.
அமைச்சர் பதவியில் இருந்தபோது அரசு சொத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைக்கு வந்தபோது கருணா இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டார்.