அடித்தளமற்ற கிணறு என அறியப்படும் யாழ்ப்பாணம் நிலாவரை கிணற்றிலிருந்து சடலத்தை வெற்றிகரமாக இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்.லெப்டினட் கொமாண்டர் ரசிக திசானாயக்கவின் வழிகாட்டலின் கீழ் குறித்த சடலத்தை இலங்கை கடற்படையினர் சுழியோடி குழுவினர் மீட்டுள்ளனர்.
நிலாவரை கிணறு ஒன்றிலிருந்து ஒருவரின் உடலை மீட்க உதவி வழங்கினர்.அடித்தளமற்ற கிணறு என அறியப்படும் இப்பகுதி யாழ் குடா நாட்டின் ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும்.
40மீற்றர் ஆழத்தில் உள்ள பாறையின் முகட்டில் சிக்குண்டு காணப்பட்ட இறந்தவரின் சடலத்தை கடற்படை சுழியோடிகளால் நீருக்கடியில் ரிமோட் கருவி மூலம் இயக்கப்படும் வாகனத்தைப்பயன்படுத்தி கண்டறிந்தனர்.
இவ்வாறு கண்டறியப்பட்ட சடலத்தை கடற்படை சுழியோடிகள் குழுவின் இரு சுழியோடிகளின் துணிகரச் செயலின் மூலம் ஆழத்திலிருந்து மேற்பரப்பிற்கு கொண்டு வரப்பட்டது.
இவ்வாறான ஆழமான கிணறு ஒன்றிலிருந்து இலங்கை கடற்படையினரால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட முதலாவது நடவடிக்கை இது என்பது குறிப்பிடுகின்றனர்.
135 அடியில் சடலம் இருந்தபோதும் அதுக்கு அப்பாலும் பல ஆயிரம் அடிக்கு ஒரு குகை இருப்பதாகவும் அது எங்கே போய் முடிகின்றது என்று தெரியாது எனவும் கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.