வெறி கொண்டு திரியும் கன்னடர்கள்: பகை தீர்க்க துடிக்கும் தமிழர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/09/2016 (திங்கட்கிழமை)
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வரும் 20ஆம் தேதி வரை 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்தது. இதனையடுத்து பெங்களூரில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. கன்னடர்கள் தமிழர்கள் மீதும், தமிழர்கள் கன்னடர்கள் மீதும் இனவெறியுடன் தாக்கல் நடத்தி வருகின்றனர்.
காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதை எதிர்த்து கன்னட அமைப்பினர் கடந்த 6 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து கர்நாடகா அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் வருகிற 20ஆம் தேதி 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட உதத்ரவிட்டது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த புதிய உத்தரவு கர்நாடகா அரசுக்கு மேலும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இதனால் கன்னட அமைப்பினர் வெறியாட்டத்தை தொடங்கியுள்ளனர்.
பெங்களூரில் உள்ள பூர்விகா, ஆனந்த பவன் போன்ற தமிழக கடைகள் மீதும் தமிழர்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மாண்டியாவில் வசித்து வரும் ஓய்வு பெற்ற நீதிபதியின் வீடு மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சென்னையில் உள்ள கர்நாடகா வங்கி மீது கற்களை ஏறிந்து தமிழர்கள் பழிக்கு பழி என்று தாக்குதல் நடத்தி வருகின்றனர். இரு மாநிலங்களிலும் இதுபோன்று தாக்குதல் நடைபெறுவதால், தமிழக-கர்நாடகா எல்லையில் உள்ள அத்திப்பள்ளி செக்போஸ்ட் மூடப்பட்டது.
சென்னையில் உள்ள கர்நாடகா சங்கா மேல்நிலைப்பள்ளி, மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பு கருதி விடுமுறை அளித்துள்ளது.
இதனிடையே பெங்களூரில் தமிழர்கள் தாக்கப்படுவதை தடுக்க 144 தடை ஆணையை மாநில அரசு பிறப்பித்தது. போராட்டத்தில் ஈடுப்பட்ட கன்னட அமைப்பினரை காவல்துறையினர் விரட்டியடித்தும், கைது செய்தும் வருகின்றனர்.
ஒரு சில இடங்களில் வாகனங்களுக்கு தீயிட்டு எரித்துள்ளனர். இதுகுறித்து பெங்களூரு காவல்துறை அதிகாரி கூறியிருப்பதாவது:-
பதட்டமான சூழ்நிலை குறைந்து வருகிறது. இன்னும் சற்று நேரத்தில் கலவரம் இல்லாமல் நிலைமையை கைக்குள் கொண்டு வந்துவிடுவோம் என்று கூறியுள்ளனர்.