வீதிக்கு வந்த 180 நாகப்பாம்புகள்!! அச்சத்தில் பொதுமக்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 27/08/2016 (சனிக்கிழமை)
சீனாவின் தென்மேற்கு சிசுவன் மாகாணத்தில் இனப்பெருக்க பண்ணையில் இருந்து 180 குட்டி நாகப்பாம்புகள் தப்பித்துச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜியுலாங் இனப்பெருக்க பண்ணையில் இருந்து தப்பித்த 180 குட்டி நாகப்பாம்புகளில் 23 பாம்புகள் பெரியவை.
நேற்று காலை நிலவரப்படி அவற்றில் 120 பாம்புகள் பிடிபட்டன. 30 பாம்புகள் கொல்லப்பட்டன.
7 பாம்புகள் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இறுதியாக மீதமுள்ள 23 பாம்புகளை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
பாம்புகள் மேற்கொண்டு முன்னேறாமல் இருக்கவும், பாம்பு கடிபட்டால் மருந்துகள் ஏற்பாடு செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொதுமக்கள் பயப்பட வேண்டாம் என்றும், பாம்புகளை கண்டால் அருகில் உள்ள வனத்துறையினரை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.