பதக்கம் வென்று சாதித்தாலும், பாழடைந்த விடுதியில் துப்பாக்கிச் சத்தத்துக்கு மத்தியில் தவிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 25/08/2016 (வியாழக்கிழமை)
இந்த அணியின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான வெஸ்லி கொரிர், தாங்கள் தங்கியிருக்கும் பாழடைந்த விடுதியில், இரவு முழுவதும் துப்பாக்கிச் சத்தம் கேட்டதாகத் தெரிவித்துள்ளார்.
விலை குறைவான விமானங்கள் கிடைப்பதற்காக அதிகாரிகள் காத்திருந்ததால், தாங்கள் நாடு திரும்பவதை அவர்கள் தாமதம் ஆக்கிவிட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் அடுத்தடுத்து பிரச்சனைகள் வந்தமையால் நாட்டின் ஒலிம்பிக் கமிட்டியை கலைத்து விட்டார் கென்யாவின் விளையாட்டுத் துறை அமைச்சர்.
ஒலிம்பிக் போட்டியில் எந்த ஒரு ஆப்ரிக்க நாட்டைக் காட்டிலும் கென்யா அதிகப்படியான பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.