அமெரிக்காவில் உள்ள மரிலாண்ட் மாகாணத்தில் உள்ள பல்டிமோர் என்ற மாவட்டத்தில் உள்ள வீட்டில் திடீரென ஏற்பட்ட தீயில் தனது உயிரை இழந்து, 8 மாத குழந்தையை காப்பாற்றிய நாயின் பாசம் மனதை உருகச் செய்கிறது. வீ்ட்டில் தனது குழந்தையை நாயின் பொறுப்பில் விட்டுவிட்டு கடைக்கு சென்ற குழந்தையின் அம்மா எரிக்கா திரும்பி வந்து பார்கும் போது, தீ மளமளவென எரியத் தொடங்கியுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த எரிக்கா தனது பெண் குழந்தை விவியானா மற்றும் போலா என்ற நாயை காப்பாற்ற கடுமையாக போராடியுள்ளார். ஆனால் தீ வேகமாக பரவி இருந்தால் கதவை உடைக்க முடியவில்லை. மேல்மாடியில் அவரது குழந்தை மற்றும் நாய் உள்ளது. மிகவும் போராடி கதவை உடைக்க முயன்ற போது, அவரது முகம் மற்றும் கைகளில் தீப்பற்றியது. தனது குழந்தை அழும் குரலும், நாய் குரைக்கும் குரலும் கேட்கவே தீயை பொறுட்படுத்தாமல் அவர் வேகமாக உடைக்க முயன்றுள்ளார்.
பின்னர் தீயணைப்பு துறையினர் மற்றும் அருகில் உள்ளவர்கள் உதவியுடன் கதவை உடைத்தனர். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, மேல் மாடியில் இருந்த தனது குழந்தை விவியானா மற்றும் தனது நாய் போலா இருவரும் கீழ்தட்டில் இருந்துள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த எரிக்கா பின்னர் தனது நாயின் மூலம் குழந்தை காப்பாற்றப்பட்டுள்ளதை உணர்ந்தார். போலா குழந்தையை தீ படாதபடி மூடி அணைத்து கீழ்த்தட்டிக்கு கொண்டு வந்து குழந்தையை முழுவதுமாக பாதுகாத்துள்ளது. இதில் போலா என்ற அந்த நாயின் மீது தீ பரவியதில் நாய் உயிரிழந்தது. தனது உயிரை கொடுத்து குழந்தையை காப்பாற்றிய இந்த சம்பவம் பார்த்தவர்கள் மற்றும் கேட்டவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் வகையில் உள்ளது.
இதுகுறித்து எரிக்கா கூறுகையில், எனது நாய் போலாவிற்கு எனது குழந்தை என்றால் ரொம்ப பிரியம். எப்போதும், தனது குழந்தையுடனேயே இருக்கும் என்றார். எனினும் போலா தான் தனது முதல் குழந்தை என கண்ணீர்மல்க தெரிவித்தார்.