பிரேசிலில் இடம்பெற்றுவரும் ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் வழங்கப்படும் தங்கப்பதக்கம் முழுவதும் தங்கத்திலானது அல்ல.
93 சதவீதம் வெள்ளி, 6 சதவீத செப்பு மற்றும் ஒரு சதவீத தங்கம் ஆகியவையினை கொண்டே ஒரு தங்கப்பதக்கம் உருவாக்கப்படுகிறது. அதாவது ஒரு தங்கப்பதக்கத்தில் 494 கிராம் வெள்ளியும் 6 கிராம் தங்கம் கலக்கப்பட்டிருக்கும்.
குறித்த தங்கப்பதக்கத்தின் பெறுமதி இலங்கை மதிப்பில் 93 ஆயிரம் ரூபாவாகும்.
இதேபோன்று வெள்ளிப்பதக்கத்தில் 92. 5 சதவீதம் வெள்ளி, 7. 5 சதவீத செப்பும் கலந்திருக்கும். இதன் பெறுமதி 48 ஆயிரம் ரூபாவாகும். வெண்கலப்பதக்கத்தில் 97 சதவீத செப்பு கலந்துள்ளதுடன் அதன் பெறுமதி 726 ரூபாவாகும்.
ரியோ ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் ஆகியவற்றுக்காக மொத்தம் 5 ஆயிரத்து 130 பதக்கங்கள் பிரேசிலில் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.