ஷாவில் உள்ள மகள்களை மீட்டுத் தரக் கோரி பெற்றோர் வழக்கு: முடித்து வைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவு
பிரசுரிக்கபட்ட திகதி: 12/08/2016 (வெள்ளிக்கிழமை)
தனது கீதா, லதா ஆகிய இரண்டு மகள்கள் சட்ட விரோதமாக ஈஷா யோகா மையத்தில் அடைத்து வைத்துள்ளனர் என்று கோவையைச் சேர்ந்த காமராஜ் மனைவி சத்தியஜோதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட் நீதிபதிகள் நாகமுத்து, பாரதிதாசன் ஆகியோர் கொண்ட அமர்வு, மாவட்ட எஸ்.பி. மற்றும் பெற்றோர்களை நேரில் அமைத்து சென்று கோவை மாவட்ட நீதிபதி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதையடுத்து மாவட்ட நீதிபதி, கடந்த புதன்கிழமை 4 மணி நேரம் ஈஷா யோகா மையத்தில் விசாரணை நடத்தினார். அதன் அறிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஐகோர்ட்டில் சமர்பிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த ஐகோர்ட், கீதா, லதாவை பெற்றோர்கள் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம். கீதா, லதா ஆகியோரை வீட்டுக்கு திரும்புவதற்கு நிர்பந்திக்கக் கூடாது என்றும் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.
முழு விருப்பப்படியே ஈஷா யோகா மைத்தில் இருப்பதாகவும், தங்களின் விருப்படியே சன்னியாசம் செய்து வைத்ததார்கள் என்று கீதா, லதா ஆகியோர் கூறியிருப்பதால் அவர்கள் விருப்பத்தில் தலையிட முடியாது என்று கூறியுள்ளனர்.