குற்றச்செயல்களை குறைக்கும் நடவடிக்கையாக சென்னை போலீஸ் நேற்று இரவு அதிரடி ரெய்டில் ஈடுபட்டனர், அப்போது பல்வேறு குற்றச்சாட்டுகளில் 550-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
ஆப்ரேஷனின் ஒருபகுதியாக போலீசார் ரோந்து பணியினை தீவிரப்படுத்தினர், வாகனச் சோதனையில் ஈடுபட்டனர் மற்றும் ஓட்டல்கள் மற்றும் விடுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர், அப்போது குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள், தலைமறைவாக இருந்தவர்கள் மற்றும் கோர்ட்டால் ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டனர் என்று போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவித்து உள்ளன. நேற்று இரவு நடைபெற்ற நீண்ட நேர ஆப்ரேஷனில் சந்தேகத்தின் பெயரில் சுமார் 480 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட ஒரு கிரிமினலையும் போலீசார் கைது செய்து உள்ளனர்.
முக்கிய குற்றப்பிரிவுகளில் கீழ் 17 பேரையும் கைது செய்து உள்ளனர். குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக சுமார் 82 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்று தகவல்கள் தெரிவித்து உள்ளன என்று யு.என்.ஐ. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது.