காஷ்மீரில் அமைதியின்மையை ஏற்படுத்த குழந்தைகள் பயன்படுத்தப் படுகின்றனர் என்று அம்மாநில முதல்-மந்திரி மெகபூபா முப்தி கூறிஉள்ளார்.
காஷ்மீரில் பயங்கரவாத தளபதி பர்கான் வானி கடந்த 8-ம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து கடந்த 18 நாட்களாக அங்கு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. மாநிலத்தில் நடந்த வன்முறை சம்பவங்களில் 47 பேர் உயிரிழந்தனர். 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். மெல்ல அமைதி திரும்பிவரும் மாநிலத்தில், அமைதிக்கு வலுவான கோரிக்கையை மாநில முதல்-மந்திரி மெகபூபா முப்தி அழைப்பு விடுத்து உள்ளார்.
மக்களுக்கு கோரிக்கை விடுத்து உள்ள மெகபூபா முப்தி “அடுத்த தலைமுறையினரை பற்றி சிந்தியுங்கள், தங்கள் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க வைப்பவர்கள், இங்குள்ள பிற குழந்தைகளை வன்முறைக்கு தூண்டிவிடுகின்றனர்.” கடந்த 15 வருடங்களில் பிறந்த குழந்தைகள்தான் வன்முறை நடைபெற்ற போது காணப்பட்டனர். அவர்களை இனியும் அவர்களை அதிக வன்முறைகளில் தள்ளமுடியாது,” என்றார்.
பர்கான் வானி கொலையை கண்டித்து பாகிஸ்தான் கருப்பு தினம் அனுசரித்ததற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
வன்முறையை தூண்டிவிட்டவர்கள் மீது தாக்குதலை தொடுத்த மெகபூபா, சூழ்நிலையை பாழாக்க பல்வேறு படைகள் ஒன்றாக வந்து உள்ளன என்று சாடிஉள்ளார்.
இது அவர்களுடைய ”தொழில்”. அவர்கள் பணத்தை செலவு செய்கின்றனர், பிரச்சனையை உருவாக்க ஒருபுறத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சிறுவர்களை அனுப்புகின்றனர். சிறுவர்களை திசைதிருப்பி போலீஸ் நிலையம் மற்றும் பாதுகாப்பு படைகளின் முகாமை நோக்கி அனுப்புகின்றனர், ஏனென்றால் அங்கு பதிலடி இருக்கும் என்று அவர்களுக்கு தெரியும். சாதாரண அப்பாவி மக்கள் உயிரிழக்கிறார்கள், தூண்டிவிடுபவர்கள் தப்பிச் செல்கிறார்கள்,” என்றும் கூறிஉள்ளார்.
தன்னுடைய உயிரிழந்த தந்தை முப்தி முகமது சயீத்தின் பேச்சை குறிப்பிட்டு காட்டிய மெகபூபா முப்தி, துப்பாக்கிகளும், கையெறிகுண்டுகளும் எதனையும் சரிசெய்யாது, “பேச்சுவார்த்தை மட்டுமே உதவும்,” என்றார். தெருவில் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ள மெகபூபா, “அவர்கள் காவல் நிலையம், நீதிமன்ற வளாகம், பாதுகாப்பு முகமைகள் முகாகாம்களை தாக்கி சேதப்படுத்திஉள்ளனர், இவை அனைத்தையும் நாம் புணரமைப்பு செய்யவேண்டும்,” என்றார்.