இஸ்ரேல் விமானப்படை தளபதி சுட்டுக்கொல்லப்பட்ட அதிர்ச்சி காட்சிகள் வெளியீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 29/07/2016 (வெள்ளிக்கிழமை)
இஸ்ரேல் நாட்டில் உள்ள பேருந்து நிலையத்தில் அந்நாட்டு விமானப்படை தளபதி சுட்டுக்கொல்லப்பட்ட காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பெப்ரவரி 24ம் திகதி விமானப்படை தளபதியான Eliav Gelman(30) பேருந்து நிலையம் ஒன்றில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் நிகழ்ந்தபோது காட்சிகள் அனைத்தும் அங்குள்ள கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ளன. இந்த வீடியோ தற்போது இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.
பேருந்து நிலையம் ஒன்றில் ராணுவ வாகனத்திற்காக தளபதி நின்றுக்கொண்டு இருந்துள்ளார். அவருடன் துப்பாக்கிகளை ஏந்தியவாறு சில வீரர்களும் நின்றுள்ளனர்.
அப்போது எதிர் திசையில் நபர் ஒருவர் சாலையை கடந்து பேருந்து நிலையம் அருகில் நடந்து வருகிறார்.
சில வினாடிகளுக்கு பிறகு திடீரென துப்பாக்கியை எடுத்த அந்த நபர் தளபதியை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளார்.
இக்காட்சியை கண்ட வீரர்கள் நபரை நோக்கி சுட்டுள்ளனர். ஆனால், துரதிஷ்டவசமாக அந்த நபர் தளபதியை கடக்கும்போது வீரர்களின் துப்பாக்கியில் இருந்து புறப்பட்ட தோட்டாக்கள் தளபதியை சுட்டு வீழ்த்தியுள்ளன.
குண்டடிப்பட்ட தளபதி சாலையில் விழுந்து உயிருக்கு போராடியுள்ளார். தளபதியை நோக்கி சுட்ட அந்த நபருக்கும் குண்டடிப்பட்டதால் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், இரண்டு மணி நேரத்திற்கு பிறகு சிகிச்சை பலனளிக்காமல் தளபதி உயிரிழந்தார்.
அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அந்த நபர் தற்போது சிகிச்சை முடிந்து பொலிசாரால் கைது செய்யப்பட்டு விசாரணையில் ஈடுப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.