பிரேசிலில் அடுத்தமாதம் நடைப்பெறவிருக்கும் ரியோ ஒலிம்பிக் போட்டியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 10 பேர் கொண்ட குழுவினரை பொலிஸ் கைது செய்துள்ளனர்.
குறித்த குழுவினர் ஐ.எஸ். தீவிரவாதிகள் அல்ல இருப்பினும் அவர்கள் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புக்கொள்ள முயற்சித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்ந்து அவர்களில் ஒருவன் பராகுவேயில் உள்ள ஆயுத விற்பனை குழுவினருடன் தொடர்பு கொண்டு AK47 துப்பாக்கி வாங்க திட்டமிட்டார்.
இந்த குழுவினர் வட்ஸ் எப் செயளி மூலம் தொடர்புகொண்டு வந்ததை காண்காணித்தபோது அவர்களது திட்டம் குறித்து தெரியவந்தது.
இந்த குழு தேடும் பணியில் 130 பொலிஸார்கள் ஈடுபட்டடு, 10 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களில் 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றனர்.
மேலும்,நாடு முழுவதும் இந்த குழுவினரை சேர்ந்த மேலும் 19 பேரை தேடிவருகிறோம்’’ என தெரிவித்தார்.
ரியோ ஒலிம்பிக் தொடர் தொடங்க இரண்டு வாரங்களே உள்ள நிலையில் தீவிரவாத செயலுக்காக காத்திருந்த குழு கைதுசெய்யப்பட்ட சம்பவம் பெரும் பிரேசிலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.