கோல் போடும் பல சந்தர்ப்பங்களை சென்.மேரிஸ் வீரர்கள் தவற விட்டதால் யாழின் கில்லாடி கிண்ணத்தை தவற விட்டனர்.
பிரசுரிக்கபட்ட திகதி: 20/07/2016 (புதன்கிழமை)
அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையம் தனது 97வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடாத்திய “யாழின் கில்லாடி” யார்?? மின்னொளி உதைபந்தாட்ட போட்டியில் இறுதிப்போட்டியில் சென்.மேரிஸ் அணியை எதிர்த்து குருநகர் பாடுமீன் அணி மோதியது.
போட்டியின் ஆரம்பத்தில் சென்.மேரிஸ் அணியின் நட்சத்திர வீரர் நிதர்சன் 1வது கோலினை அடித்தார் தொடர்ந்து கோல் போடும் பல சந்தர்ப்பங்களை சென்.மேரிஸ் வீரர்கள் தவற விட்டனர். தொடர்ந்து இடம் பெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் போராடின போட்டியில் இரு அணி வீரர்கள் இருவர் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.
போட்டியின் இறுதிக்கட்டத்தில் தமக்கு கிடைந்த நேரடி தண்ட உதையினை கோலக்கி பாடுமீன் அணி 1-1 என போட்டியை சமன் செய்தது. தொடர்ந்து தண்ட உதையில் 4-4 என சமநிலை ஏற்பட இறுதி வாய்ப்பை சென்.மேரிஸ் அணி தவற விட அதனை கோலாக்கி கிண்ணத்த தனதாக்கியது பாடுமீன் அணி. போட்டியில் பதில் கோல்காப்பாளராக செயற்பட்ட சிந்துஜன் மற்றும் பின்கள வீரர்கள் சிறப்பாக செயற்பட்ட போதிலும் வெற்றியை பெறமுடியாமல் போனமை தூரதிஸ்ரமே
நேற்றைய போட்டியில் இரு அணி வீர்ர்களும் ஆடிய விதத்தினை போட்டியை பார்க்க வந்த இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன தலைவர் உட்பட அனைத்து பிரமுகர்கள் ரசிகர்களின் பாராட்டையும் பெற்று தந்துள்ளது.
மேலும் சென்.மேரிஸ்சின் தோல்விக்கான காரணங்களில் இதுவும் ஒன்று
அவ் அணி இலங்கை பிரிவு 1 க்கான போட்டியில் விரர்கள் கவணம் செலுத்துவதாலும் தொடர்ந்து வெளிமாவட்டங்களில் சென்று விளையாடுவதால் விரர்களுக்கு ஓய்வு கொடுக்காமல் உள்ளுர் போட்டிகளை நடத்துவதினாலும் என்று விளையாட்டு விமர்சகர்களில் கருத்துக்கள் எனவே போட்டிகளை நடத்துபவர்கள் இலங்கை பிரிவு 1 விளையாடும் ஆணியினை கவணத்தில் கொண்டு போட்டிகளை ஒழுங்கு செய்வது நன்று காரணம் தமிழ் இனத்தின் மரியதையை காக்கும் அணி என்பதால்.
போட்டியில் சிறப்பான முறையில் விளையாடிய அருள்ராசா யூட் அன்ரனி, அன்ரன்சாள்ஸ்.( தங்கன் ) . இருவரும் தேசிய அணிக்கான பயிற்சிக்கு அழைப்பு பெற்றுள்ளார்கள் இருவரும் எதிர் வரும் 25 திகதி கொழும்பு பயணமாக உள்ளார்கள்.