பிரபல ஆங்கில டிவி சேனலில் தொகுப்பாளராக இருப்பவர் ராஜ்தீப் சர்தேசாய். இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா ‘ஏஸ் அகெய்ன்ட்ஸ் ஆட்ஸ்’ (Ace Against Odds) என்ற பெயரில் தனது சுயசரிதை புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகத்தில் வெளியிட்ட, வெளியிடாத தகவல்கள் குறித்து ராஜ்தீப் சர்தேசாய் சானியா மர்சாவிடம் கேள்விகள் கேட்டார்.
சர்தேசாய்: ”பிரபலம் அடைந்துள்ள நீங்கள், எப்போது வாழ்க்கையில் செட்டில் ஆகிப் போகிறீர்கள்?. துபாயில் குடியேறுவீர்களா?. அல்லது வேறு எந்த நாட்டில் குடியேறுவீர்கள்?. உங்களுடைய தாய்மைப்பேறு பற்றி. உங்களுடைய குடும்பம் பற்றி, நான் உங்களுடைய சுயசரிதை புத்தகத்தில் பார்க்கவில்லை. இதை பார்க்கும்போது நீங்கள் குடியேறுவதற்கு முன்பு வரை ஓய்வு என்பதை நீங்கள் விரும்பவில்லை என்பது போல் இருக்கிறது
சானியா: நான் செட்டில் ஆகி விட்டேன் என்று நீங்கள் நினைக்கவி்ல்லையா?
சர்தேசாய்: உங்களுடைய ஓய்வு, குடும்பம் மற்றும் தாய்மைப்பேறு பற்றி பேசவேண்டாம். டென்னிசுக்கு அப்பால் உள்ள வாழ்க்கை பற்றி கூறுங்கள்.
சானியா: நான் தாய்மை அடைவதை தேர்வு செய்யாமல், உலகத் தரவரிசையில் நம்பர் ஒன் வீராங்கனையாக இருப்பது உங்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது போல் தெரிகிறது. நான் ஒரு பெண்மணியாக எல்லா நேரத்திலும் இந்த கேள்வியை சந்தித்திருக்கிறேன். அனைத்து பெண்களும் இதை சந்திக்கிறார்கள். முதலில் திருமணம், இரண்டாவது தாய்மைபேறு பற்றி கேள்வி கேட்கிறார்கள். இது மட்டும்தான் விஷயமா? விம்பிள்டன் வெற்றி, நம்பர் ஒன் ஆகி செட்டில் ஆனதெல்லாம் விஷயம் இல்லை என்று கூறுவது துரதிருஷ்டவசமானது. ஆனால், குடும்ப வாழ்வில் செட்டில் ஆவது இறுதியில் நடக்கும், இப்போது அல்ல. அது நடக்கும்போது, அனைவரிடமும் முதலில் கூறுவேன்.
சர்தேசாய்: இந்த கேள்விக்காக நான் கட்டாயம் மன்னிப்பு கேட்கிறேன். கேள்வி முற்றிலும் மோசமானது. நான் இனிமேல் இந்த கேள்விகளை எந்த வீராங்கனையிடமும் கேட்டமாட்டேன்.” என்றார்.