துருக்கி நாட்டை கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டு ராணுவம் அறிவிப்பு! (Live View)
பிரசுரிக்கபட்ட திகதி: 15/07/2016 (வெள்ளிக்கிழமை)
பிரதமர் புலென்ட் இல்திரிம் தலைமையிலான துருக்கி அரசு கவிழ்க்கப்பட்டு அந்த நாட்டின் ராணுவம் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது.
துருக்கியில் பிரதமர் யில்திரிம் தலைமையிலான அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கையில், நாட்டை கைப்பற்றியுள்ளதாக அந்த நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது.
முன்னதாக தலைநகர் இஸ்தான்புல் அருகே அமைந்துள்ள இரண்டு பெரிய பாலங்களில் ராணுவம் குவிக்கப்பட்டு வாகனங்களை தடுத்து நிறுத்தி வந்தனர்.
இதனிடையே இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் யில்திரிம், இது மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஆட்சி என்றும், அவர்கள் நினைத்தால் மட்டுமே அகற்ற முடியும் என தெரிவித்துள்ளார்.
இதனிடையே தலைநகர் இஸ்தான்புல்லில் அமைந்துள்ள Ataturk சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ராணுவம் அறிவித்துள்ளது.
மட்டுமின்றி முக்கிய தலைவர்களையும் அரசு அதிகாரிகளையும் ராணுவம் பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
சமூக வலைத்தளங்கள் அனைத்தையும் முடக்கியுள்ள ராணுவம் அரசு தொலைக்காட்சியையும் முடக்கியுள்ளது.
துருக்கியின் தென் பகுதியில் அமைந்துள்ள Bodrum பகுதியில் விடுமுறையை கழிக்க சென்றுள்ள ஜனாதிபதி எர்டோகன் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகாவில்லை.
ஜனநாயகத்தை பாதுகாக்கவும் மனித உரிமைகளை மீட்கவும் ஆட்சியை கவிழ்க்க வேண்டி வந்ததாக ராணுவம் அறிவித்துள்ளது.