ஒரு படம் எப்போது வெளியாகும் என்பது முதலில் படத்தின் வெளிநாட்டு விநியோகஸ்தர்களுக்கே அறிவிக்கப்படும்.
வெளிநாடுகளிலும் படத்தை தணிக்கை செய்ய வேண்டும் என்பதால் அவர்களிடமே முதலில் தெரிவிப்பார்கள்.
கபாலி ஜுலை 1 திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. பிறகு ஜுலை 15 என்றனர். பிறகு மீண்டும் ஒருவாரம் தள்ளிப் போய், ஜுலை 22 என்றனர். இப்போது வைரலாக பரவிவரும் வெளிநாட்டு போஸ்டர்களால் மீண்டும் தேதியில் மாற்றமா என்ற சந்தேகத்தில் ரசிகர்களுக்கு ஒருவழியாக கபாலி 29 வெளியீடு என வெளிநாடுகளில் விளம்பரம் செய்கின்றனர். ஆக, ஜுலை 29 கபாலியை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் என்ற செய்திகள் வெளியாயின.
இதனை தொடர்ந்து ‘கபாலி’ படம் உலகமெங்கும் வருகிற ஜுலை 22-ந் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் டிக்கெட்டுகள் வெளிநாடுகளில் விநியோகிக்கப்பட்டு, பரபரப்பாக விற்பனையாகி வருகின்றன.
இந்நிலையில், சென்னையில் எப்போது ‘கபாலி’ படத்தின் டிக்கெட் விற்பனை தொடங்கும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். இத்னைத் தொடர்ந்து இன்று சென்னையின் பிரபல எஸ்.பி.ஐ. சினிமாஸ் நிறுவனம் ‘கபாலி’ படத்தின் டிக்கெட் முன்பதிவை இன்று தொடங்கியது.
தொடங்கப்பட்ட சில நிமிடங்களில் முதல்நாள் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன. அடுத்தடுத்த நாட்களுக்கும் தொடர்ந்து டிக்கெட்டுகள் விற்பனையாகி வருகின்றன.
இந்நிலையில் கபாலி படம் ரசிகளிடையே மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.