பிரான்ஸின் தென்பகுதி நகரான நீஸ் நகரில், பாஸ்டில் தினக் கொண்டாட்டங்களின் போது குழுமியிருந்த கூட்டத்தினரின் மீது லாரி ஒன்று தாறு மாறாக மோதித் தாக்குதல் நடத்தியதில் குழந்தைகள் உட்பட குறைந்தது 84 பேர் கொல்லப்பட்டதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் பெர்னார்ட் கூறியுள்ளார்.
லாரியின் முகப்பு கண்ணாடியில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த தடங்கள், பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி ஒட்டுநரை கொன்றதாக கூறியுள்ளனர். துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகள் லாரிக்குள் இருந்ததாக சொல்கிறார்கள்.
பிரான்ஸின் தேசிய தினத்தை வாண வேடிக்கைகளுடன் நீஸ் நகரம் கொண்டாடி கொண்டிருந்த போது இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது.
லாரி டிரைவர் சுமார் 2 கிமீ தூரம் பெரும் கூட்டத்துக்குள் லாரியை ஓட்டியதாக அரச வழக்குரைஞர் ஷான் மிஷேல் ப்ரெத்ரை கூறியுள்ளார்.
தாக்குதலை தொடர்ந்து அவசர சேவைகள் விரைந்தன. இதில், 84 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். மேலும், 18 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என பிரஞ்சு அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர்.
பிரெஞ்சு அதிபர் பிரான்சுவா ஒல்லாந்து இந்தத் தாக்குதலை "பயங்கரவாதத் தாக்குதல்" என வர்ணித்துள்ளார்.
நீஸ் நகரில் ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.பிரஞ்சு உள்துறை அமைச்சர் பெர்னார்ட் கஸிநுவே செய்தியாளர்களிடம் பலியானவர்களின் எண்ணிக்கை 80 என தெரிவித்துள்ளார்.
காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படும் காட்சி. காயம் அடைந்தவர்களின் முழு எண்ணிக்கை இதுவரை தெரியவில்லை.
பாஸ்டில் தினக் கொண்டாட்டங்களின் போது குழுமியிருந்த கூட்டத்தினரின் மீது தாறு மாறாக சென்று மோதிய லாரி.