இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் கைது
பிரசுரிக்கபட்ட திகதி: 11/07/2016 (திங்கட்கிழமை)
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன், நாமல் ராஜபக்ஷ நிதி மோசடி குற்றத்தடுப்புப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ நிதி நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான பணத்தை முறைகேடாக செலவு செய்தது தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக நிதி மோசடி குற்றத்தடுப்பு பிரிவுக்கு அழைக்கப்பட்ட நிலையில், விசாரணையின் முடிவில் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷவை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.இன்று மாலை அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளருமான கோத்தபய ராஜபக்ஷவும் இன்றைய தினம் நிதி மோசடி குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தபட்டது குறிப்பிடத்தக்கதாகும்.