வீரர்களின் திறைமையிலான ஆட்டத்தின் மூலம் கிண்ணத்தை தனதாக்கியது யாழ் சென்மேரிஸ் வி.கழகம்......
பிரசுரிக்கபட்ட திகதி: 04/07/2016 (திங்கட்கிழமை)
திக்கம் விளையாட்டு கழகம் நடாத்திய மாவட்ட ரீதியிலான போட்டியில் பலாலி விண்மீன் விளையாட்டு கழகத்தை 2:0 என்ற கோல் கணக்கில் வென்றிகொண்டு சென்மேரிஸ் அணி கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது
இறுதி ஆட்டத்தில். சென் மேரிஸ் அணி வீரர்களின் திறைமையிலான ஆட்டத்தில் இத் தொடர் கிண்ணத்தை தனதாக்கியது யாழ் மேரிஸ் வி.கழகத்தினர் போட்டியில் ஆரம்பித்து முதல் பகுதிவரை சென்மேரிஸ் வி.கழத்தின் ஆதிக்கத்திலேயே பந்து காணப்பட்டது.
பல போட்டிகளின் பின்னர் தனது அதிரடியான துணிச்சலான ஆட்டத்தை வெளிப்படுத்திய யூட் 20 வது நிமிடத்தில் மூல உதை ஒன்றை உதைக்க நிதர்சன் அதை கோலாக்கினார். தொடர்ந்து இரண்டாம் பாதி ஆட்டம் ஆரம்த்து சில நிமிடங்கள் விண்மீன் அணி தனது ஆட்டத்தை வெளிப்படுத்தி கோல்களை போட முற்பட்ட வேளை. ஜெக்சன். தங்கன். யான்சன். யுனிற்றன. நிறோஜன் தடுத்தாடினர்.
மேரிஸ் அணியின் முன்கள வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக ஆட. போட்டி நிறைவடைய சில நிமிடங்கள் இருந்த வேளை. பின்கள வீரராக செயற்பட்ட நிறோஜனின் கால்பரப்பில் பட்ட பந்தை அசுர வேகத்தில் கொண்டு சென்ற பந்தை ஜெனற்றுக்கு பரிமாற. ஆவேசமான முறையில் அதை கோலாக மாற்றி அணியன் வெற்றியை உறுதி செய்தார் இவ் வெற்றியின் மூலம் சென் மேரிஸ் அணியின் கிண்ண வேட்டையை ஆரம்பிதார். இறுதியில் 2:0 என்ற கோல்களினால். சாம்பியனானது சென் மேரிஸ் அணி.
போட்டியில்.
மக்கள் மனங்கமர்ந்த வீரராக சென் மேரிஸ் அணியின் இளம் வீரர்
மதிவதனன் (மதி ) தெரிவாகினார்.
ஆட்டநாயகனாக சென் மேரிஸ் அணியின் வீரர்
நட்சத்திர வீரர் நிதர்சனும்.
சிறந்த ஆட்டநாயகனாக போட்டியில் கலக்கிய சென் மேரிஸ் அணியின் வீரர்.
நிறோஜன் (ஸ்ரிபன் ஜேராட் )