சிறிலங்கா தொடர்பிலான வாய்மொழி அறிக்கையினை சபையில் சமர்பித்தார் ஐ.நா ஆணையாளர் !
பிரசுரிக்கபட்ட திகதி: 29/06/2016 (புதன்கிழமை)
ஐ.நா மனித உரிமைச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, சிறிலங்கா தொடர்பிலான தனது வாய்மொழி அறிக்கையினை ஐ.நா ஆணையாளர் செயிட் அல் ஹசேன் அவர்கள் சபையில் தெரிவித்தார்.
18 மாத கால அவகாசத்தினை சிறிலங்காவுக்கு ஐ.நா தீர்மானம் வழங்கியிருந்ததோடு, ஓன்பதாவது மாதத்தில் வாய்மொழி அறிக்கையொன்றினை ஆணையாளர் சபைக்கு தெரிவிக்க வேண்டுமென தீர்மானம் வலியுறுத்தியிருந்தது.
வாய்மொழியறிக்கையின் சாரம்சம் ,38 விடயங்களை அவதானித்து ஏலவே செவ்வாயன்று வெளியிட்டிருந்த அறிக்கையினை அழுத்தம் திருத்தமாக, மீளவும் புதன்கிழமை இடம்பெற்றிருந்த சபை அமர்வில் தெரிவித்திருந்தார்.
இதேவேளை சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சிறிலங்காவின் நிலைப்பாட்டினை சபைக்கு தெரிவித்திருந்தார்.