ஐரோப்பிய கால்பந்து போட்டியில் கலவரம் பிரான்ஸ் காவல் துறையை கண்டிக்கும் அழகி
பிரசுரிக்கபட்ட திகதி: 25/06/2016 (சனிக்கிழமை)
பிரான்ஸில் ஐரோப்பிய கால்பந்து போட்டி நடந்து வருகிறது. கடந்த 12ம் தேதி நடந்த இங்கிலாந்து- ரஷ்யா அணிகளுக்கு இடையிலான போட்டியில் இவ்விரு அணிகளின் ரசிகர்களுக்கு இடையே பலத்த மோதல் ஏற்பட்டது.
அத்துடன் அவர்கள் மைதானத்திற்குள்ளும் மோதலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் மோதலில் ஈடுபட்ட ரசிகர்களை கைது செய்து உள்ளனர்.ஐரோப்பிய கால்பந்து போட்டியில் தொடர்பாக கலவரத்தில் ஈடுபட்ட வழக்கில் இதுவரை 557 ரசிகர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இங்கிலாந்தின் பிரபல வீரரின் மனைவியும் நடிகையுமான ரெபாக்கா வார்டி தனது சமூகவலைதளத்தில் பிரான்ஸ் காவல்துறையின் நடவடிக்கை குறித்து கடுமையாக சாடி உள்ளார்.
இங்கிலாந்து ரசிகர்கள் நாட்டிற்கு வெளியே சென்று கால்பந்தாட்ட போட்டியை காண செல்வதில் மோசமான அனுபவத்தை பிரான்சில் மட்டுமே பெற்றுள்ளார்கள். காரணமின்றி அவர்கள் மீது கண்ணீர்புகை குண்டுகள் வீசபட்டன. மிருகங்கள் போல் அடைத்து வைக்கபட்டு உள்ளார்கள். இது ஒரு அதிர்ச்சியான விஷயம்.இதை நானே என்கண்களால் பார்த்தேன். இதற்கு நானேசாட்சி என கூறி உள்ளார்.