முழுவதுமாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர் பயிற்சி விமானம் : நாட்டுக்கு அர்பணிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 17/06/2016 (வெள்ளிக்கிழமை)
பெங்களூரு: முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட போர் பயிற்சி விமானத்தை பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். எச்.டி.டி. 40 ( HTT-40) என்ற இந்த பயிற்சி விமானம் முழுவதுமாக இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டது. இந்த பயிற்சி விமானமானது பெங்களூரு ஹிந்துஸ்தான் ஏரோநாடிகல் மையத்தில் தயாரிக்கப்பட்டது. நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த பயிற்சி விமானமானது உருவாக்கப்பட்டுள்ளது பயற்சி விமானம்.
பெங்களுரூவில் இன்று நடைபெற்ற துவக்க விழாவில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் துறை மனோகர் பாரிக்கர் இந்த விமானத்தை நாட்டுக்கு அர்பணித்து வைத்தார்.இவ்விழாவில் விமானப் படை உயரதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த வபயிற்சி விமானத்தை விமானப் படை வீரர்களின் முதல் நிலை பயிற்சிக்காக பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.