சுவிட்சர்லாந்தில் உலகின் மிக நீளமான சுரங்க ரெயில் போக்குவரத்து துவங்கியது
பிரசுரிக்கபட்ட திகதி: 01/06/2016 (புதன்கிழமை)
உலகின் மிகவும் நீளமான சுரங்க ரெயில் போக்குவரத்து சுவிட்சர்லாந்தில் துவங்கப்பட்டுள்ளது.
சுவிஸ் சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைகுறைக்க சுவிட்சர்லாந்தின் கோட்ஹார்ட் பகுதியில் இருந்து , தெற்கு மாகாணமான டின்சினோகான்டன் பகுதி வரை 57 கி.மீ.தொலைவிற்கு ஆல்ப்ஸ் மலையை குடைந்து ரயில் பாதை அமைக்கப்பட்டது. இதற்கான போக்குவரத்து இன்று துவங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதில் சுவிட்சர்லாந்து அதிபர் யோகன் ஸ்னைடர், பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹோலாண்டே, ஜெர்மன் சானசலர் ஏஞ்சலா மெர்க்கல், இத்தாலி பிரதமர் மெட்டீயோ ரெயின்ஸி ஆகியோர் கலந்து கொண்டு ரெயிலில் பயணம் செய்தனர். வரும் டிசம்பர் மாதத்திற்குள், சுவிட்சர்லாந்தின் ஜுரிச் மாகாணத்தில் இருந்து இத்தாலியின் மிலன் நகர் வரை போக்குவரத்து பாதை நிறைவடையும் என அந்நாட்டு ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. வரும் டிசம்பர் மாதம் முதல் முழுமையான பயன்பாட்டிற்கு வரும்போது, 250க்கும் மேற்பட்ட சரக்கு ரயில்களும், 65 பயணிகள் ரயில்களும் இந்த சுரங்கப்பாதையை கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு மற்றும் தெற்கு ஐரோப்பாவை இணைக்கும் ரயில் வலையமைப்பின் ஒரு பகுதியாக இந்த சுரங்கப்பாதை இருக்கும். இந்த ஆழமான ரெயிவே சுரங்கப்பாதை 12 பில்லியன் டாலர் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் மிக நீண்ட சுரங்க ரெயில் பாதையாக (கோட்ஹார்ட் பகுதியில் இருந்து தெற்கு மாகாணமான டின்சினோகான்டன் பகுதி வரை) தற்போது இடம் பெற்றுள்ளது. , ஜப்பானின் செய்கான் ரெயில் சுரங்கப்பாதையை இரண்டாம் இடத்துக்கும், பிரிட்டனுக்கும் பிரான்ஸுக்கும் இடையே உள்ள 50.5 கிமீ நீளமான , இங்கிலீஷ் கால்வாய்க்கு அடியில் செல்லும் சானல் சுரங்க ரெயில் பாதையை மூன்றாம் இடத்தில் உள்ளது.