சிரியாவின் மையப்பகுதிகளில் கடந்த வாரம் நிகழ்த்தப்பட்ட பல்வேறு வெடிகுண்டு தாக்குதல்களில் சுமார் 150 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், வாடிகன் நகரில் உள்ள செயின் பீட்டர்ஸ்பர்க்கில் போப் பிரான்சிஸ் தனது வார உரையை நிகழ்த்தினார். அப்போது திங்கட்கிழமை ஐ.எஸ் பயங்கரவாதிகளின் தற்கொலைப் படைத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் ஆன்மாக்கள் சாந்தியடையட்டும் என்று கூறிய போப் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல்களை தெரிவித்தார்.
இதில் பெரும்பாலான தாக்குதல்கள் ஆயுதமில்லா மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்டவைகள் மீது நடத்தப்பட்டவை என்றார். ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வரும் ஜிகாதி ஐ.எஸ். பயங்கரவாதிகள் இதயங்கள் மாற வேண்டும் என்று கடவுளிடம் போப் பிரான்சிஸ் பிராத்தனை செய்தார்.