இந்திய கிரிக்கெட் அணி ஜூன் மாதம் ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுகிறது.
அதை தொடர்ந்து ஜூலை–ஆகஸ்ட் மாதம் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டில் விளையாடுகிறது.
இந்த இரு தொடர்களுக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
ஜிம்பாபவே தொடரில் சீனியர் வீரர்கள் வீராட் கோலி, தவான், ரோகித் சர்மா அஸ்வின், ரகானே ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ரெய்னா, யுவராஜ் சிங்கு வாய்ப்பு கொடுக்கவில்லை.
யுகவேந்திர ஷால், மன்தீப்சிங், கருண் நாயர் பயஸ்பாசல் ஆகிய புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் புதுமுக வீரர் ஷர்துல் தாகூருக்கு வாய்ப்பு கிடைத்து உள்ளது.
இந்த இரு தொடர்களிலும் பாண்ட்யா சகோதரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வில்லை. ஹர்த்திக் பாண்ட்யா, கருணால் பாண்ட்யா ஆகியோர் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வருகிறார்கள்.
இருவரும் சிறப்பாக ஆடி வருபவர்கள். இதனால் ஜிம்பாப்வே தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என்று கருதப்பட்டது. ஆனால் இரு தொடரிலும் தேர்வு குழு அவர்களுக்கு வாய்ப்பை வழங்காதது ஆச்சரியமே.
இதில் கருணால் பாண்ட்யா இந்த ஐ.பி.எல். தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடினார். இதனால் அவருக்கு மட்டுமாவது வாய்ப்பு கொடுத்து இருக்கலாம். ஆனால் தேர்வுகுழு அவர் மீது நம்பிக்கை வைக்கவில்லை.
ஹர்த்திக் பாண்ட்யாவின் ஆட்டம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.