வியட்நாமுக்கு ஆயுத விற்பனை: நீண்ட கால தடையை நீக்கி ஒபாமா உத்தரவு
பிரசுரிக்கபட்ட திகதி: 23/05/2016 (திங்கட்கிழமை)
இந்த நீண்ட கால தடையை முடிவுக்கு கொண்டு வந்ததன் மூலம், பனிப்போரின் ஒரு எஞ்சிய அடையாளம் அகற்றப்படுகிறது என்று ஒபாமா கூறியுள்ளார். ஆன போதிலும், மனித உரிமைகள் அம்சங்கள் உள்ளடங்கிய அமெரிக்காவின் கடுமையான நிபந்தனைக்களுக்கு கட்டுப்பட்டு எதிர்காலத்தில் ஆயுத விற்பனை இருக்கும் என்று ஒபாமா மேலும் தெரிவித்தார்.
தனது அண்டை நாடுகள் மற்றும் அமெரிக்காவை பதட்டமடைய வைக்கும் விதமாக, தெற்கு சீன கடல் பகுதியில் தனது பிராந்திய உரிமையை சீனா கோரி வரும் வேளையில், அமெரிக்க அதிபரின் வியட்நாம் பயணம் அமைந்துள்ளது.
வாஷிங்டனின் எண்ணப்படி தெற்கு சீன கடல் பகுதியில் கடல் போக்குவரத்து சுதந்திரத்தை தொடர்ந்து சாத்தியப்படுத்த அமெரிக்கா முயலும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ள ஒபாமா, சர்வதேச சட்டம் அனுமதித்துள்ள அனைத்து பகுதிகளிலும் தனது கப்பல்களின் செயல்பாட்டை அமெரிக்கா தொடரும் என்று தெரிவித்துள்ளார்.