ஜேர்மன் நாடாளுமன்ற குழு யாழ்.விஐயம்! வலி.வடக்கு நலன்புரி முகாம் மக்களுடன் சந்திப்பு!
பிரசுரிக்கபட்ட திகதி: 20/05/2016 (வெள்ளிக்கிழமை)
வடமாகாணத்தில் அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் நல்லிணக்க நடவடிக்கைகள் குறித்து பார்வையிடுவதற்காக வருகை தந்திருக்கும் ஜேர்மன் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்றைய தினம் யாழ்.விஐயம் மேற்கொண்டு வலி.வடக்கு உயர்பாதுப்பு வலயம் மற்றும் நலன்புரி முகாம் ஆகியவற்றை பார்வையிட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள நல்லெண்ண நடவடிக்கைகள் குறித்து பா ர்வையிடும் நோக்கில் யாழ்.வந்த மேற்படி குழு ஆட்சி மாற்றத்தின் பின் மீள்குடியேற்றத்திற்காக அனுமதி வழங்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டுள்ளது.
அத்துடன், மீள்குடியேறிய மக்களின் நலன்கள், தேவைகள் குறித்தும் ஆராய்ந்துள்ளதுடன் வலிஇ வடக்கு உயர்பாதுகாப்பு வலயத் தினால் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள் ள கோணப்புலம் நலன்புரி முகாம் சென் று ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.இத ன்போது தமது மீள்குடியேற்றத்தை உடன டியாக மேற்கொண்டு தம்மை தமது சொந்த நிலங்களில் மீள்குடியேற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்ததுள்ளனர்.