தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளை தவிர்த்து 232 தொகுதிகளுக்கும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. இதில் மொத்தம் 73.76 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
மேலும், மாவட்டவாரியாக பதிவாகியுள்ள வாக்குப்பதிவு நிலவரம் :
1. காஞ்சிபுரம் மாவட்டம் - 71%
2. தருமபுரி மாவட்டம் - 85%
3. கிருஷ்ணகிரி மாவட்டம் - 79.16%
4. அரியலூர் மாவட்டம் - 83.75%
5. பெரம்பலூர் மாவட்டம் - 79.54%
6. வேலூர் மாவட்டம் - 77.24%
7. கடலூர் மாவட்டம் - 78.64%
8. நாகப்பட்டினம் மாவட்டம் -77.3%
2 வதுஇணைப்பு
தமிழகம் முழுவதும் 74.26 சதவீதம் ஓட்டு பதிவானதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிவித்தார்.
தமிழ்நாட்டில் பதிவான வாக்கு சதவீதம் இன்று அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 74.26 சதவீதம் ஓட்டு பதிவானதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிவித்தார்.
தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் உள்ள 232 தொகுதிகளிலும் அமைதியான வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த 232 தொகுதிகளிலும் மொத்தம் 5 கோடியே 77 லட்சத்து 33 ஆயிரத்து 574 வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் 4,28,73,674 பேர் வாக்குபதிவு செய்து உள்ளனர். ஆண்கள் 2,12,44,129 பேரும், பெண்கள் 2,16,28,807 பேரும் ஓட்டு அளித்து உள்ளனர். மூன்றாம் பாலினர் (திருநங்கை) 738 பேர் வாக்களித்து உள்ளனர். ஓட்டு சதவீதம் 74.26 என தெரிவித்தார் ராஜேஷ் லக்கானி.