கொரோனா வைரசின் தாக்கம் தற்போது குறைவடைந்துள்ளதாகவும், தீவிர சிகிச்சை பிரிவின் அதிகூடிய எண்ணிக்கை அனைத்தையும் நாம் கடந்துவிட்டோம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
உள்ளிருப்பு தளர்வு!
டிசம்பர் 15 ஆம் திகதி இரண்டாம் கட்ட உள்ளிருப்பு தளர்த்தப்படும். அதன் பின்னர் இரவு நேர ஊரடங்கு நடைமுறையில் இருக்கும்.
பயணக்கட்டுப்பாடு!
வெளியில் செல்வதற்கான அனுமதி பத்திர சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும். மக்கள் அத்தியாவசியமாக தேவைகளுக்கு மாத்திரமே வீட்டை விட்டு வெளியேற வேண்டும், வீட்டில் இருந்து வேலை செய்வதையும் மக்கள் கடைப்பிடிக்க வேண்டும். அத்தியாவசியமற்ற பயணங்களை மக்கள் தவிர்க்க வேண்டும்!>> எனவும் மக்ரோன் குறிப்பிட்டார்.
இவ்வார சனிக்கிழமை முதல் வெளியில் செல்வதற்குரிய கால அவகாசம் ஒரு மணிநேரம் எனும் அளவில் இருந்து தளர்த்தப்பட்டு, தற்போது மூன்று மணிநேரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேவேளை அதிகபட்ச பயண தூரம் 1 கிலோமீற்றர் எனும் எல்லையில் இருந்து தற்போது 20 கிலோ மீற்றராக அதிகரிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டு தலங்களில் அதிகபட்சமாக 30 பேர் வரை அனுமதிக்கப்படுவார்கள்.
கிருஸ்துமஸ் விடுமுறை!
டிசம்பர் 15 ஆம் திகதி முதல் இரவும் 9 மணியில் இருந்து காலை 7 மணி வரை ‘இரவு நேர ஊரடங்கு’ நடைமுறையில் இருக்கும்.
கிருஸ்துமஸ் மற்றும் அதற்கு முந்தைய நாளான கிருஸ்துமஸ் eve ஆகிய இரு நாட்களிலும் (டிசம்பர் 24,25) எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி தளர்த்தப்படும், அதேவேளை டிசம்பர் 31 புதுவருட eve அன்றும் கட்டுப்பாடுகள் முற்றாக தளர்த்தப்படும் எனவும் மக்ரோன் குறிப்பிட்டார்.
தடுப்பூசி!
தற்போதைய சூழ்நிலையில் தடுப்பூசி கட்டாயத்தேவை இல்லை. எமது பிரெஞ்சு விஞ்ஞான ஆய்வு குழு தடுப்பூசி விடயத்தை கவனித்துக்கொள்ளும்.. தடுப்பூசி விடயத்தில் ஒரு தெளிவு வேண்டும். வெளிப்படையான தகவல்கள் வேண்டும். அதன் பின்னர் அவை பயன்படுத்தும் முறை குறித்து சரியான படிமுறை வேண்டும். இவை அனைத்தும் இல்லாமல் தடுப்பூசிகளை பயன்படுத்த முடியாது! எனவும் மக்ரோன் குறிப்பிட்டார்.
பல்கலைக்கழகங்கள் திறப்பு!!
அனைத்து பல்கலைக்கழகங்களும் பெப்ரவரி 4 ஆம் திகதியே திறக்கப்படுகின்றது.
சிறு வணிகங்கள்!!
சிறு வணிக நிறுவனங்கள் வரும் சனிக்கிழமை முதல் திறக்கப்படுவதாக மக்ரோன் அறிவித்துள்ளார். கடுமையான சுகாதார விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் எனவும் மக்ரோன் வலியுறுத்தியுள்ளார். துணி கடைகள், ஆடையகம், புத்தக விற்பனை நிலையம் என அனைத்தும் திறக்கப்படும். இரவு 9 மணிவரையே அவை திறக்கமுடியும் எனவும் மக்ரோன் அறிவித்துள்ளார்.
பாடசாலைகள்!
நாள் ஒன்றில் 5,00 இற்கும் குறைவான தொற்றுக்களே பதிவாகும் நிலை ஏற்பட்டால் நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் ஜனவரி 20 ஆம் திகதி முற்றாக திறக்கப்படும்.
உணவகங்கள்!
உணவங்கள், விளையாட்டு அரங்குகள் அனைத்து, ஜனவரி 20 ஆம் திகதி முற்றாக திறக்கப்படும். அங்கும் சுகாதார கட்டுப்பாட்டுகள் மற்றும் நடைமுறைகள் பிற்றப்படும். சிறுவர்களுக்கான விளையாட்டு அரங்கம் அனைத்தும் டிசம்பர் 15 ஆம் திகதி திறக்கப்படும்.
மதுச்சாலைகள்!!
மதுபான விடுதிகளும் ஜனவரி 20 ஆம் திகதியே திறக்கப்படும்.
திரையரங்கம், அருங்காட்சியகம்!
திரையரங்கம் மற்றும் அருங்காட்சியகங்கள் அனைத்தும் டிசம்பர் 15 ஆம் திகதி திறக்கப்படும்.
ஆறு பேர் மட்டும் அனுமதி!!
அடைக்கப்பட்ட இடங்களில் (உணவகம், மதுச்சாலை, அருந்தகங்கள் போன்ற இடங்களில்..) அதிகபட்சமாக ஆறு பேர் மாத்திரமே அனுமதிக்கப்படுவார்கள் எனும் சட்டம் தொடர்கிறது. அங்கு முகக்கவசம், கை கழுவும் சனிடைசர், ஒவ்வொரு நபர்களுக்குமான இடைவெளி, நன்றாக காற்று உட்புகும் இடமாக இருத்தல் வேண்டும் மற்றும் ஒரு மணிநேரத்துக்கு ஒருமுறை அப்பகுதி கிருமி கொல்லி கொண்டு தூய்மைப்படுத்தப்பட வேண்டும். இந்த சட்டம் தொடருந்தும் நடைமுறையில் இருக்கும்.
மாகாணங்களுக்கு இடையேயான பயணம்!!
டிசம்பர் 15 ஆம் திகதி முதல் மாகாணம் விட்டு மாகாணம் பயணிக்க முடியும். உங்கள் குடும்பத்தாருடன் கிருஸ்துமஸ் கொண்டாட முடியும். ஆனால் அவையும் அத்தியாவசியமான பயணமாக இருத்தல் வேண்டும் எனவும் மக்ரோன் கோரியுள்ளார்.