உலகம் ஒரு இலட்சம் சாவினைத் தண்டியுள்ள வேளையில், ஐரோப்பாவில் மட்டும் 70.000 சாவுகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/04/2020 (வெள்ளிக்கிழமை)
உலகம் ஒரு இலட்சம் சாவினைத் தண்டியுள்ள வேளையில், ஐரோப்பாவில் மட்டும் 70.000 சாவுகள் கொரோனா வைரசினால் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக மிக வேகமாகப் பிரித்தானியாவில் நோய்த்தொற்றும் சாவுகளும் ஏற்பட்டுள்ளது. பிரித்தானியாவில் மட்டும் 9.000 சாவுகள் மிகவேகமாக நடந்துள்ளது.
இந்நிலையில்
24 மணி நேரத்திற்குள் பிரான்சில் 987 சாவுகள்
மொத்தச் சாவுகள் 13.917
வைத்திசாலையில் சாவுகள் 8 598 (+544)
வயோதிப இல்லங்களில் மார்ச் ஆரம்பத்திலிருந்து சாவுகள் 4 599 (+433)
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் 31267
உயிராபத்தான நிலையில் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் 7,004 (-62)
24,932 இற்கும் மேற்பட்ட நோயளிகள் முற்றாகக் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
மொத்தமாக 124,869 (+7,120) பேரிற்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
இந்தத் தகவல்களை பிரான்சின் சுகாதாரப் பிரிவின் தலைமை இயக்குநர் ஜெரோம் சாலமொன் தெரிவித்துள்ளார்.