கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிப்பு: மனிதர்களிடம் பரிசோதனை செய்ய முடிவு!
பிரசுரிக்கபட்ட திகதி: 02/03/2020 (திங்கட்கிழமை)
இந்த மருந்து மனிதர்களிடம் பரிசோதனை செய்யப்பட்டு, எதிர்வரும் ஜூலையில் வணிகரீதியாக மருந்து விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அரசின் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனத்துக்கு புதிய மருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்த நிறுவனத்தின் சார்பில், கோவிட்-19 வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட டயமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பல் பயணிக்கு மருந்து வழங்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள சீனாவிலும் புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு மனிதர்களிடம் சோதனை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்து அதிகாரபூர்வமாக எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை.