இந்த வன்முறைகளில் 35க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த போராட்டங்களுக்குப் பிறகு டெல்லியின் சாந்த் பாக், பஜன்புரா, பிரிஜ்புரி, கோகுல்புரி மற்றும் ஜாஃப்ராபாத் ஆகிய பகுதிகளில் பதற்றச் சூழல் காணப்படுகிறது.
டெல்லியில் நடந்த வன்முறையில் காவல் துறையைச் சேர்ந்த ஒருவரும் பொதுமக்களில் ஆறு பேர் இறந்துள்ளதாகவும் டெல்லி போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.
இந்த வன்முறைகளில் 35க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த போராட்டங்களுக்குப் பிறகு டெல்லியின் சாந்த் பாக், பஜன்புரா, பிரிஜ்புரி, கோகுல்புரி மற்றும் ஜாஃப்ராபாத் ஆகிய பகுதிகளில் பதற்றச் சூழல் காணப்படுகிறது.
டெல்லியில் நடந்த வன்முறையில் காவல் துறையைச் சேர்ந்த ஒருவரும் பொதுமக்களில் ஆறு பேர் இறந்துள்ளதாகவும் டெல்லி போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.
Delhi CM Arvind Kejriwal: Everyone wants that the violence be stopped. The Home Minister had called a meeting today, it was a positive one. It was decided that all the political parties will ensure that peace returns to our city. #NortheastDelhi
"எல்லோரும் டெல்லி வன்முறை ஓய வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். உள்துறை அமைச்சர் (அமித்ஷா) சந்திப்பு ஒன்று அழைப்பு விடுத்திருந்தார். அந்த சந்திப்பு நேர்மறையாக இருந்தது. எல்லா அரசியல் கட்சிகளும் நகரில் அமைதி திரும்புவதை உறுதி செய்வது என்று முடிவு செய்யப்பட்டது". என்று அரவிந்த் கேஜ்ரிவால் கூறியதாகத் தெரிவித்துள்ளது ஏ.என்.ஐ.
கோகுல்புரியில் டயர் கடை ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டதால், அந்த இடமே புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. கோகுல்புரி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகில் சிலர் கற்களை குவித்து வைத்து எறிவதை காண முடிகிறது என பிபிசி செய்தியாளர் ஃபைசல் கூறுகிறார். மேலும் பாலம் ஒன்றின் மேல் நின்று நடப்பதை கவனித்து கொண்டிருந்த சில செய்தியாளர்கள் மீது கல் எறியப்பட்டதாகவும் அவர் கூறுகிறார். இதற்கிடையில் ஜெய் ஸ்ரீ ராம் முழக்கங்களும் கேட்டன.
தற்போது மீட் நகர் அருகில் 200க்கும் மேற்பட்ட நபர்கள் மூவர்ண கொடி ஏந்தியபடி வீதியில் பாரத் மாதா கி ஜெய் மற்றும் வந்தே மாதரம் முழக்கமிட்டு செல்கின்றனர். இந்த கூட்டத்தில் சில காவி நிற கொடிகளையும் காண முடிந்தது என பிபிசி செய்தியாளர் ஃபைசல் கூறுகிறார்.
சாந்த்பாக், ஜாஃபராபாத் மோஜ்பூர், பஜன்புரா உள்ளிட்ட டெல்லியின் வடகிழக்கு பகுதிகளில் திங்கள்கிழமை முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் தற்போது 2 மணி அளவில் பஜன்பூரா பகுதியில் இரு குழுக்களுக்கு இடையே மீண்டும் கல்வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளன.
அமித் ஷா, அரவிந்த் கேஜ்ரிவால் அவசரக் கூட்டம்
இந்நிலையில், டெல்லியில் நடக்கும் வன்முறைகள் குறித்து தாம் மிகுந்த கவலை கொண்டிருப்பதாகவும், டெல்லியில் அமைதியை நிலைநாட்ட அனைவரும் முயற்சிக்க வேண்டும் என்றும் தெரிவித்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளின் அவசரக் கூட்டத்தை இன்று காலையில் கூட்டினார்.
இந்த கூட்டத்துக்கு பிறகு பேசிய அவர், ''அமைதி காக்க வேண்டுமென டெல்லி மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன். வட கிழக்கு டெல்லியில் நடந்த வன்முறை குறித்து கவலை கொண்டுள்ளோம். இந்த வன்முறை சம்பவத்தில் போலீசார் மற்றும் பொதுமக்கள் பலர் காயமடைந்துள்ளனர். சிலர் இறந்துள்ளனர். பல கடைகள் மற்றும் வீடுகள் சூறையாடப்பட்டு கொளுத்தப்பட்டன. இது துரதிஷ்டவசமானது'' என்று தெரிவித்தார்.
''பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பவ இடங்களில் போதுமான போலீசார் இல்லையென்றும், உயர் அதிகாரிகளிடமிருந்து உத்தரவு வரும்வரை போலீசாரால் நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாது என்றும் என்னிடம் தெரிவித்தனர்'' என்று மேலும் கூறினார்.
முன்னதாக, டெல்லி காவல் அதிகாரிகள், மத்திய உள்துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்கள் பின்னிரவில் அவசரமாக ஆலோசித்திருந்தார்.
டெல்லி காவல் துறை டெல்லி அரசின்கீழ் இல்லாமல், மத்திய உள்துறையின் கீழ் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் மற்றும் அதிகாரிகளுடன் இன்று இன்னொரு கூட்டத்தையும் நடத்தவுள்ளார்.