ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியது பிரித்தானியா
பிரசுரிக்கபட்ட திகதி: 01/02/2020 (சனிக்கிழமை)
கிட்டத்தட்ட 47 ஆண்டுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இருந்து வந்த பிரித்தானியா, ஒன்றியத்திலிருந்து வெளியேறும் இந்த வரலாற்று நிகழ்வு லண்டன் நேரப்படி இரவு 11 மணியளவில் நடைபெற்றது.
இந்த நிகழ்வை குறிக்கும் வகையில் பிரித்தானியாவில் கொண்டாட்டங்களும், பிரக்ஸிட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.
ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஸ்கொட்லாந்தில் மெழுகுவர்த்தி ஏந்தியும், லண்டன் நாடாளுமன்ற சதுக்கத்தில் பிரெக்ஸிட் ஆதரவாளர்கள் கொண்டாட்டங்களிலும் ஈடுபட்டனர்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கு சில நிமிடங்களுக்குமுன், இதுதொடர்பாக தனது சமூக ஊடக பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், பலருக்கு இது நம்பிக்கையின் வியக்கத்தக்கத் தருணம் என்றும் இந்த தருணம் ஒருபோதும் வராது என்று நினைத்திருந்தார்கள் என்றும் தெரிவித்தார்.