அமெரிக்கத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் தளபதியின் இறுதிச் சடங்கில் பல்லாயிரக்கணக்கான மக்கள்!
பிரசுரிக்கபட்ட திகதி: 06/01/2020 (திங்கட்கிழமை)
இதன்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் ஈரான் ராணுவ தளபதியின் கொலை அமெரிக்காவுக்கு இருண்ட தினத்தைக் கொண்டுவரும் என காசிம் சுலெய்மனியின் மகள் ஜீனப் சுலெய்மனி தேசியத் தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார்.
அயதுல்லா கோமேனி மறைவின் போது திரண்ட மக்கள் கூட்டத்தை இந்த இறுதிச் சடங்கு கூட்டம் நினைவுபடுத்துவதாக சர்வதேச ஊடகங்கள் வர்ணித்துள்ளன.
இதேவேளை கொல்லப்பட்ட ராணுவ தளபதியின் பதவிக்கு நியமிக்கப்பட்ட புதிய தளபதி இஸ்மாயில் குவானி, “தொடர்ந்து சுலெய்மனி பாதையில் பயணிப்போம் என்றும் சுலெய்மனி இழப்பை ஈடுகட்ட அமெரிக்காவை இந்தப் பிராந்தியத்திலிருந்து விரட்டுவதுதான் ஒரே லட்சியம் எனவும் கூறியுள்ளார்.
இதேவேளை ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படைகளை அனுப்புவதாக இருந்தால் அங்கு ஏற்படுத்தப்பட்ட மிகச் செலவுமிக்க விமான்ப்படை தளத்திற்கான மிகப்பெரிய தொகையை ஈராக் கொடுக்க வேண்டியிருக்கும் என்று ட்ரம்ப் ஏற்கெனவே எச்சரித்துள்ளார்.
இதை மீறி அமெரிக்கப் படைகளை நட்பு ரீதியாக அல்லாமல் வேறு வகையில் வெளியேற்ற நினைத்தால் ஈரானே பரவாயில்லை என்று கூறும் அளவுக்கு வாழ்வில் நினைத்துப் பார்க்க முடியாதத் தடைகளை ஈராக் மீது விதிப்போம் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளமை அப்பகுதியில் ஒருவிதமான போர்ப்பதற்றத்தை உருவாக்கியுள்ளது.