சம்பவம் ஏற்பட்டு 24 மணிநேரங்களுக்குள் இமாலய அளவிலான நன்கொடைகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
<<உலக தரத்திலான திருத்தவேலைகள் இடம்பெறும்>> என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நேற்று தெரிவித்திருந்ததோடு, நன்கொடைகள் கேகரிப்பு ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பரிஸ் மாநகர சபை சார்பாக €50 மில்லியன் யூரோக்கள் நன்கொடை வழங்குவதாக பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ தெரிவித்திருந்தார். இல்-து-பிரான்ஸ் மாகாணத்துக்கான பொது போக்குவரத்து துறையில் இரு து €10 மில்லியன் யூரோக்கள் நன்கொடை வழங்குவதாக Valérie Pécresse தெரிவித்திருந்தார்.
தவிர, பிரான்சின் மில்லியனர் Bernard Arnault, தமது குடும்பம் சார்பாக €200 மில்லியன் யூரோக்கள் நன்கொடையாக வழங்குவதாகவும், முன்னதாக மில்லியனர் Francois-Henri Pinault, தாம் தமது குழுமம் சார்பாக €100 மில்லியன் யூரோக்கள் வழங்குவதாக தெரிவித்திருந்தார்.
இவை தவிர, பிரான்சின் பல்வேறு நிறுவனங்களும் இந்த நன்கொடை பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இது தவிர, இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் பொது மக்களிடம் இருந்து நன்கொடைகளை Heritage Foundation நிறுவனம் பெறத்தொடங்கியுள்ளது. 24 மணிநேரங்களுக்குள் நன்கொடை €700 மில்லியன் யூரோக்களை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தவிர, நன்கொடையாளர்கள் தங்களுக்கான வரியில் இருந்து பல்வேறு விலக்குகளை பெறுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.