நாளையை மீண்டும் பெரும் பலத்துடன் கட்டியெழுப்புவோம் - பிரான்சிற்காக பிரார்த்தனையில் பராக் ஒபாமா!
பிரசுரிக்கபட்ட திகதி: 15/04/2019 (திங்கட்கிழமை)
பரிசின் நோத்ரதாம் தேவாலயத்தின் தீயணைப்புப் பணி இரவாகியும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. 400 இற்கும் மேற்பட்ட தீயணைப்புப் படையினர் 17 பெரும் நீர்க்குழாய்களுடன் போராடி வருகின்றனர்.
உலகத் தலைவர்கள் பலர் பிரெஞ்சு மக்களின் துயரத்தில் தாங்களும் பங்களிப்பதாகத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
முக்கியமான முன்நாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தேவாலயம் சென்று பிரார்த்னையில் ஈடுபட்டுள்ளார்.
"நோத்ர-தாம் பரிஸ், உலகத்தின் பெரும் சொத்துக்களில் ஒன்று. பிரெஞ்சு மக்கள் துயரத்தில் இருக்கும் வேளையில் நான் உங்களை நினைத்துக் கொள்கின்றேன். துயரத்தில் பங்கு கொள்கின்றேன். வரலாற்றைத் தொலைக்கும் போது நாம் துயரம் கொள்வது மனித இயல்பு. ஆனால் அதே இயல்புடன், மீண்டும் நாளையை, மிகவும் பலத்துடன் ஒன்றிணந்து கட்டி எழுப்புவோம்" எனத் தனது டுவிட்டரில் பராக் ஒபாமா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.