யாழ் குடாநாட்டில் வாள்வெட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடும்குழுக்களை கைது செய்வதற்கு அதிடிப்படையைக் களத்தில் இறக்குமாறு யாழ்ப்பாணம்பிரதி பொலிஸ் மா அதிபருக்கு நீதிபதி இளஞ்செழியன் பணிப்புரை பிறப்பித்துள்ளார்.
யாழ் குடாநாட்டில் அதிகரித்துள்ள வாள்வெட்டு மற்றும் கொள்ளைச்சம்பவங்களைக்கட்டுப்படுத்துவதற்கு பிரதேச பொலிசாருக்கு உதவியாக விசேட அதிரடிப்படையைக்களத்தில் இறக்கி குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பல்களைக் கைது செய்யுமாறுநீதிபதி பிரதி பொலிஸ் மா அதிபருக்கு நேரடியாகப் பணிப்புரை விடுத்துள்ளார்.
யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் கடந்த வாரம் ஆஜராகிய யாழ் பிரதிபொலிஸ் மா அதிபர் யாழ் குடாநாட்டில் குற்றச் செயலகளைக்கட்டுப்படுத்துவதற்குப் பொலிசார் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்துவிபரித்திருந்தார்.
பொலிசார் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த நீதிபதி இளஞ்செழியன்,குற்றச்செயல்கள் அதிகரித்துள்ள பிரதேசங்களாகிய அராலி, வட்டுக்கோட்டை,சுன்னாகம், கோப்பாய், மானிப்பாய் போன்ற இடங்களில் விசேட அதிரடிப்படையைக்களத்தில் இறக்கி, குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்களைக் கைது செய்வதற்குவிசேட தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்தந்தப் பிரதேச பொலிசாருக்குஒத்துழைப்பு வழங்குமாறு அறிவுறுத்தினார்.
குற்றச்செயல்கள் நிலைமைகள் குறித்து நீதிபதியிடம் விபரித்த யாழ்ப்பாணம் பிரதிபொலிஸ் மா அதிபர் ஏற்கனவே அதிரடிப்படை களத்தில் இறக்கப்பட்டு,சந்தேகத்திற்குரியவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகள்முன்னெடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
அத்துடன் மாலை 6 மணியில் இருந்துவிசேட அதிரடிப்படையின் மோட்டார் சைக்கிள் அணியின் ரோந்து நடவடிக்கைகள்ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
இருப்பினும் குற்றச்செயல்கள் யாழ் குடாநாட்டில் அதிகரித்த வண்ணம் இருப்பதைச்சுட்டிக்காட்டிய நீதிபதி, வாள்வெட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களைக்கட்டுப்படுத்துவதற்காகக் கூடுதலாக விசேட அதிரடிப்படையை கடமையில்ஈடுபடுத்துமாறு பணிப்புதை விடுத்தார்.
இதனையடுத்து, உடனடியாகவே, விசேட அதிரடிப்படையின் பொலிஸ் அத்தியட்சகருடன்தொடர்பு கொண்ட யாழ் பிரதி பொலிஸ் மா அதிபர், குற்றச்செயல்கள் அதிகமாகஇடம்பெறுகின்ற முக்கியமான இடங்களைச் சுட்டிக்காட்டி, ரோந்து நடவடிக்கைகளைஅதிகரித்து, குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறுபணிப்புரை விடுத்தார்.