Navaiman   Navaiman
முகப்பு செய்திகள் மரண அறித்தல்கள் படங்கள் காணொளிகள் நேரடி ஒளிபரப்பு தொடர்புகளுக்கு
தமிழ் செய்திகள்
 அதிர்வு
 சங்கதி
 ஈழதேசம்
 பதிவு
 தமிழ்வின்
 பிபிசி தமிழ்
 யாழ்.இணையம்
 வெப் உலகம்
 நக்கீரன்
 தென் செய்தி
 லங்காசிறி
 தமிழ் சிஎன்என்
 எதிரி
 நாம் தமிழர்
 ஆதவன் நியூஸ்
 தாரகம்
 வத்திக்கான் செய்தி
ஆங்கில செய்திகள்
 Tamil Net
 Tamil Gurdian
 Tamil Canadian
 Daily Mirror
 Ada Derana
 UK Tamil News
 Colombo Page
 The Academic
தமிழ் பத்திரிகைகள்
 தினக்குரல்
 வீரகேசரி
 தினமணி
 சுடர் ஒலி
 தினகரன்
 தின பூமி
 உதயன்
தமிழ் பாடல்கள்
 ராகா
 ஓசை
 தமிழ் பீற்
 ஈழம் பாடல்கள்
 தமிழ் வயர்
சினிமா தளங்கள்
 சினிமா உலகம்
 தமிழ் சினிமா
 தினமலர் சினிமா
 தமிழ் ஸ்டார்
 சென்னை 365
 சினி ஸ்பொட்
 இந்தியா-கிளிட்ஸ்
 tamil filmibeat
வானொலிகள்
 புலிகளின் குரல்
 சக்தி FM
 வர்ணம் FM
 தமிழ் FM
 சுடர் FM
 காதல் FM
 தமிழர்குரல்
 ஈழப்பறவைகள் இணையம்
தொலைக்காட்சிகள்
 தீபம்
 தமிழன்
 தந்தி
 புதிய தலைமுறை
 சத்தியம்
 News7 Tamil
 மக்கள் TV
 Jaya TV
 Vasanth TV
 பொதிகை TV
 IBC தமிழ்
திரைப்படங்கள்
 Tamil Yogi
 Tamil Gun.com
 Thakkali
 Run Tamil
 Tamil Key.com
 Cool Tamil
 Thiruttu VCD

மனித உரிமைகள் தினம்

பிரசுரிக்கபட்ட திகதி: 10/12/2016 (சனிக்கிழமை)

ஒருவர் எந்த தேசத்தையோ, மதத்தையோ, பாலினத்தையோ, மொழியையோ சேர்ந்தவராக இருந்தாலும் அவருக்கு இந்த அடிப்படை உரிமைகள் உறுதி செய்யப்படவேண்டும் என்பதுதான் நாகரிக மனிதனின் லட்சியமாகும். மனித உரிமைகள் தினம் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 10 அன்று கொண்டாடப்படுகிறது. 1948-ல் முதன்முறையாக மனித உரிமைகள் தினத்தை ஐ.நா. கொண்டாடியது. 1950-ல் ஐ.நா. சபை, அனைத்து நாடுகளும் ஆர்வமுள்ள அமைப்புகளும் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 10-ஐ, மனித உரிமைகள் தினமாகக் கொண்டாடும்படி அழைப்புவிடுத்தது. அதுமுதல் மனித உரிமைகள் தினம் சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தியா 1947-ல் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலைபெற்றது. சுதந்திர தேசமாக தன்னை உருவாக்கிக்கொண்ட இந்தியா, ஜனநாயகப் பாதையைத்  தேர்ந்தெடுத்தது. அது முதற்கொண்டு இந்திய தலைவர்கள் உலக அரங்கில் இந்தியாவுக்கு ஒரு கெளரவமான இடத்தைப் பெற முயன்றுவருகிறார்கள். ஒரு தேசம் உலகத்தின் பார்வையில் கெளரவமான இடத்தைப் பெற இரு விஷயங்கள் அவசியமானது. ஒன்று பொருளாதார வெற்றி. ராணுவ அடிப்படையில் வலுப்படுத்திக்கொள்ள மட்டுமின்றி, மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தவும் பொருளாதார நலன் முக்கியமானது. 

இரண்டாவது, பொதுமக்களிடையே சமத்துவம். சமத்துவம்  என்பதை எப்படி வரையறுப்பது? அனைவரும் இவ்வளவு பணம்தான் வைத்திருக்கவேண்டும், இதுபோன்ற வீட்டில்தான் வசிக்கவேண்டும் என சட்டமியற்றுவதன் மூலமா? குடிமக்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் வழங்குவது, மனித உரிமை மீறல்கள் நடைபெறாமல் பார்த்துக்கொள்வதுமூலம் இதனை உறுதிசெய்யலாம். அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உறுதிசெய்யும் பொருட்டே இடஒதுக்கீடு முறையை வலியுறுத்தி அதனை சட்ட நடைமுறைகளின்மூலம் செயல்படுத்தி சமத்துவத்தை நோக்கிய பயணத்தை நமது அரசியல், சமூகப் போராளிகள் உறுதிசெய்தனர்.

எனினும், உலகம் முழுவதும் மனித உரிமை மீறல்கள் இல்லவே இல்லாத நாடென்று எதுவுமில்லை. அந்த வகையில் சாதிய நடைமுறை வேரோடிப் போயுள்ள இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் ஏராளமாகவே உள்ளன. மேலும், அதிகாரம் மற்றும் ஆதாயத்துக்கான தொழிலாக அரசியல் இன்று பலராலும் பார்க்கப்படுவதால் அதன்வழியாக மனித உரிமைகளுக்கு பல இடைஞ்சல்கள் ஏற்படுகின்றன.

இந்தியாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் பற்றிய மிக எளிமையான சித்திரத்தைக் காண்போம். மனித உரிமைகளுக்கான ஆசிய மையமானது, இந்தியாவில் 2002- 2008-காலகட்டத்தில் காவல்நிலையத்தில் நாளொன்றுக்கு நாலு பேருக்கும் அதிகமாக மரணமடைந்துள்ளதாக அறிக்கை தந்துள்ளது. இந்தியாவில் 50 சதவிகித போலீஸ் அதிகாரிகள், சிறைவாசிகள் மற்றும் கைதிகளை உடல்ரீதியாகவோ மனரீதியாகவோ வன்முறைக்கு உள்ளாக்குகின்றனர் என தெரியவந்துள்ளது.

உலகிலேயே பாலியல்ரீதியாக பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகள் இந்தியாவில்தான் அதிகம். குழந்தைகள் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாவதிலிருந்து தடுக்க இந்தியா போஸ்கோ எனும் சட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. ஆனால், இத்தகைய பாலியல் குற்றங்களைச் செய்வோர் குழந்தைகளுக்கு நன்குதெரிந்த குடும்ப உறுப்பினர்களாகவோ, உறவினர்களாகவோ இருப்பதால் பெரும்பாலோர் புகார் தர முன்வருவதில்லை. புகார் தரப்பட்ட வழக்குகளிலும் தண்டனை வாங்கித் தரப்பட்ட வழக்குகள் குறைவென்பதால் நிலைமையில் பெரிய முன்னேற்றம் இல்லையெனச் சொல்லப்படுகிறது.

குழந்தைத் தொழிலாளர்கள், கொத்தடிமைகள், நிர்ப்பந்த தொழிலாளர்கள் எண்ணிக்கையும் இந்தியாவில் மிக அதிகம். இதை நீக்குவதற்கான உறுதியான, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க அரசுகள் தயங்கியே வருகின்றன. மேலும் உலகமயமாக்கல் நடவடிக்கை முதலாளித்துவத்துக்கு ஆதரவாக இருக்கிறதேயன்றி, தொழிலாளர் நலத்துக்கு ஆதரவாக இல்லை.

இந்தியாவில் பாலியல் தேவைகளுக்காகவும், கொத்தடிமைப் பணிகளுக்காகவும் மேற்கொள்ளப்படும் மனிதக் கடத்தல் மூலம் 8 மில்லியன் டாலர் அளவிலான சட்ட விரோத வருமானம் புரள்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆண்டுக்கு 10,000 நேபாளிப் பெண்கள், இந்தியாவுக்கு பாலியல் தொழிலுக்குக் கொண்டுவரப்படுகின்றனர். இந்தியப் பெண்கள் பாலியல் தொழிலுக்காக இந்தியாவுக்குள்ளும் வெளியிலும் கடத்தப்படுவது குறித்த சரியான புள்ளிவிவரங்கள் இல்லையெனினும், இந்த எண்ணிக்கை மிக அதிகமானது என்பதுமட்டும் நிச்சயம்.

சாதிய அடிப்படையிலான மனித உரிமை மீறல்கள்தான் இந்தியாவில் மிக அதிகம். குறிப்பாக, தலித்துகள் மேல்சாதி மற்றும் இடைநிலை சாதிகளால் வன்முறைக்கும், வன்கொலைக்கும் ஆளாவது குறித்த புள்ளிவிவரங்கள் இந்தியாவில் துல்லியமாக இல்லை.

இதற்கான புள்ளிவிவரங்களைத் தேடி நாம் வெகுதொலைவு செல்லவேண்டியது இல்லை. நம் கண்முன்னேயே பல சமயங்களில் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. மனிதர்களை சாக்கடை உள்ளிட்ட கழிப்பிடங்களைச் சுத்தம்செய்ய, அடைப்புகளை நீக்க பயன்படுத்தக்கூடாது என சட்டமே இருக்கிறது. ஆனாலும் பல மாநிலங்களில் பெரும்பாலும் இந்தப் பணி தீண்டப்படாதவர்கள் வசமே ஒப்படைக்கப்படுகிறது. தமிழகத்தில் இதுகுறித்து உயர்நீதிமன்றம் கண்டித்தபின்பும், இத்தகைய பணிசெய்பவர்களை ஊடகங்களின் கண்களில் படக்கூடாதென்றும், அவர்களுக்கு பேட்டி தரக்கூடாதென்றும் அறிவுறுத்துகிறார்களே தவிர, தேவையான நவீன எந்திரங்களை வாங்கி, மனிதர்கள் கழிவகற்றும் இழிவுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க மறுக்கிறார்கள். 

இன்னும் தலித்துகள் தோளில் துண்டணிய, சேரி தவிர்த்த பகுதிகளில் செருப்பணிய பல பகுதிகளில் அனுமதிக்கப்படுவதில்லை. பல டீக்கடைகளில் தனி கிளாஸ் நடைமுறை இருக்கிறது. பிற ஜாதிப் பெண்ணைக் காதலித்ததற்காக தலித் காலனிகள் கொளுத்தப்படுவதும், சாதி கெளரவத்தைக் காக்க தன் பெண்ணையோ, அல்லது காதல் செய்த குற்றத்துக்கு தலித் ஆணையோ வெட்டிக் கொள்ளும் கெளரவக் கொலைகள் அதிகரித்துவருவது கவலைக்குரிய ஒரு பிரச்சினையாகும். 

காவல் துறையில் டி.எஸ்.பி. போன்ற உயர்ந்த பதவியில் இருக்கும் ஒரு பெண் அதிகாரி சாதிய நெருக்கடி காரணமாக மரணமடைவதும், அந்த மரணத்தின் பின்னணியில் அவரைவிட சாதியிலும் பதவியிலும் மேல்நிலையிலுள்ள உயர் அதிகாரிகளின் பெயர்கள் சந்தேகிக்கப்படுவதும் மனித உரிமைகள் விஷயத்தில் நாம் மேலான இடத்தை அடைய நிறைய நாட்கள் இருப்பதையே காட்டுகிறது.




மரண அறிவித்தல்கள்
மேலும்... 
புதிய படங்கள்
நாவாந்துறை புனித மரியன்னை தேவாலயத்தில் வளாகத்தில் சிலுவைப்பாடு சிற்பத்தொகுதி
Uploaded Date: 30/04/2018
சின்னாவின் உப்புக்கடலோரம் கவிதை நூல் வெளியிடப்பட்டது
Uploaded Date: 12/04/2018
புனித நீக்கிலார் ஆலய திருவிழா 2017 படத் தொகுப்பு
Uploaded Date: 30/04/2017
தவக்கால செயல்திட்டமாக நாவாந்துறை சென்மேரிஸ் இளைஞர் கழகம் நிதிய உதவி
Uploaded Date: 12/03/2017
யாழ் நாவாந்துறை புனித மரியள் ஆலய திருவிழா
Uploaded Date: 15/08/2016
புதிய காணொளிகள்
வந்தான் ஒருவன் வந்தான்
Uploaded Date:08/03/2021
ஆளப்போறான் தமிழன் உலகமெல்லாமே
Uploaded Date:28/10/2017
பரபாஸ்” திருப்பாடுகளின் காட்சிகளின்
Uploaded Date:18/04/2017
ஐல்லிக்கட்டு ஈழ மண்ணில் உருவாக்கப்பட்ட புதிய பாடல்
Uploaded Date:20/01/2017
ஜல்லிக்கட்டு இன்றைய நிலை
Uploaded Date:14/01/2017